குஜராத்தில் கட்டாயம் பார்க்கவேண்டிய மலைவாசஸ்தலம்

0
1591

சுற்றுலா என்று சொல்லும்போது குஜாராத்தில் காணவேண்டியவை நிறைய உள்ளன, மேலும் அதன் மலைவாசஸ்தலங்கள் சுற்றுலா செல்வதற்கான ஒரு காரணமாகும். எனவே, இனி காத்திருக்க வேண்டாம், விரைவாக உங்கள் பைகளைத் தயார் செய்யுங்கள், அதிகமாக மாறத்தக்க நில அமைப்புள்ள, குஜராத் என்று அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலத்தின் இந்த வியப்பூட்டும் மலைவாசஸ்தலங்களை சென்று பார்க்கத் தயாராகுங்கள்.

சாபுட்டாரா மலைகள்

Saputara Hills
மஹாராஷ்டிராவை எல்லையாகக் கொண்டுள்ள, சாபுட்டாரா மலைகளின் இதமான காலநிலை மற்றும் அழைக்கும் இயற்கைக் காட்சிகள் பெரிய அளவிலான வணிகமயமாக்கலுக்கு உள்ளாகாமல் இருக்கிறது. இது ஆதிவாசி கலாச்சாரத்தைப் பராமரிக்கிறது. இதை பழங்குடியினரின் கலைகளை காட்சிப்படுத்தும் கலைக் கிராமத்தில் காணலாம். சாபுட்டாரா ஏரியின் கரைகளில் நடப்பது அமைதி அளிக்கும். நீங்கள் இங்கே படகு சாவரி செய்யலாம் அல்லது லேக் கார்டனைப் பார்க்கலாம். புஷ்பக் கயிற்றுப்பாதை பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சியை அளிக்கிறது. வன்ஸ்டா தேசியப் பூங்காவும் பூர்ணா சரணாலயமும் பார்க்கவேண்டிய இடங்களாகும். அருகிலுள்ள இரயில் நிலையம்: வாகாய்(50 கிமீ)

வில்சன் மலை

Wilson Hills
பழங்காலப் பண்புகெடாத வில்சன் மலை பங்கர்பரி காட்டுவிலங்குகள் சரணாலயத்தின் அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து அரபிக்கடலைக் காண்பது ஒரு தனித்துவமான அனுபவமாகும். ஷங்கர் நீர்வீழ்ச்சியும் பில்புடி நீர்வீழ்ச்சியும் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
அருகிலுள்ள இரயில் நிலையம்: வல்சாத்(60கிமீ)
டான் மலை

Don Hills
துரோணாச்சாரியாரின் நினைவில் பெயரிடபட்ட டான் மலை அஹ்வா மற்றும் சாபுட்டாரா மலைகளின் அருகில் அமைந்துள்ளது. இதன் இதமான காலநிலையும், இயற்கை எழில்கொஞ்சும் நிலப்பரப்புகளும் இயற்கைப் பிரியர்களை கைநீட்டி அழைக்கிறது. இந்தப் பகுதியில் இடப்பட்டிருக்கும் புதிய சாலைகள், இந்த மலைக்கு செல்வதை எளிதாக்குகிறது.
அருகிலுள்ள இரயில் நிலையம்: கேவ்டி(130கிமீ)

 

Originally written by Uditi Gupta. Read here.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here