இரயில் டிக்கெட் இரத்து செய்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும்

0
2669
Tamil Blog

இரத்து செய்தப் பின் உங்களுக்கு திரும்பப் கிடைத்த பணம் குறித்து உங்களில் பலர் நிச்சயமாக அதிர்ச்சியடைந்திருப்பீர்கள். நமக்கு அடிக்கடி இரயில் டிக்கெட்களை இரத்து செய்ய வேண்டியுள்ளது, அதே சமயத்தில், நமக்கு இரத்து செய்யும் விதிகள் குறித்து தெரியவில்லை. எனவே, இங்கே இரயில் யாத்திரி முறையைப் புரிந்து கொள்வதற்காக எளிமையாகவும் எளிதாகவும் விதிகளை வழங்கியுள்ளது.இங்கே அவைகள்…

இரத்து செய்வதற்கான கட்டணங்கள் என்ன?

உறுதிப்படுத்தப்பட்ட அல்லது RAC டிக்கெட் உடன் இருக்கும் பயணிகள் அவர்களாகவே அவர்களின் டிக்கெட்களை இரத்து செய்ய வேண்டும். காத்திருக்கும் பட்டியலில் இருப்பவர்களைப் பொறுத்தவரை, இறுதி அட்டவணை தயார் செய்யப்படும் வரையில் அவர்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றால் தானாவே இரத்து செய்யப்பட்டு முழுமையாக பணம் திருப்பிக் கொடுக்கப்படும். இரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் இரத்து செய்யப்படும் போது இரத்து செய்யப்படும் கட்டணங்களுக்கான பிரிப்பு இங்கே உள்ளது.

ஸ்லீப்பர் வகுப்புக்கான இரத்து கட்டணம்:ஒரு பயணியின் அடிப்படையில், INR 120 (உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்களுக்கு), INR 60 (for RAC அல்லது WL டிக்கெட்களுக்கு)

3 AC-க்கான இரத்து கட்டணம்:ஒரு பயணியின் அடிப்படையில், INR 180 (உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்களுக்கு), INR 60 (for RAC அல்லது WL டிக்கெட்களுக்கு)

2 AC-க்கான இரத்து கட்டணம்:ஒரு பயணியின் அடிப்படையில், INR 200 (உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்களுக்கு), INR 60 (for RAC அல்லது WL டிக்கெட்களுக்கு)

1 AC-க்கான இரத்து கட்டணம்:ஒரு பயணியின் அடிப்படையில், INR 240 (உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்களுக்கு), INR 60 (for RAC அல்லது WL டிக்கெட்களுக்கு)

பகுதியாக இரத்து செய்தல் மற்றும் அதனுடைய விதிகள் என்ன?

Irctc tamil blog

பகுதியாக இரத்து செய்தல் என்றால் 1 அல்லது 2 நபர்களுக்கான டிக்கெட்களை இரத்து செய்யும் போது மற்றவர்களுக்கான டிக்கெட்களை செல்லுபடியாவதாக வைத்துக்கொள்தல்.ஒரு படிவத்தில் 5 பயணிகளுக்கான டிக்கெட்களை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, 2 பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்கள் உள்ளன, 1 பயணிக்கு RAC மேலும் மற்றொரு 2 பயணிகள் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள். RAC மற்றும் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்காக பகுதியாக இரத்து செய்யலாம்.அதே சமயத்தில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்கள் உடன் இருக்கும் இரண்டு பயணிகள் இரயில் ஏறி பயணத்தின் போது அவர்களின் பெர்த்களை ஆக்கிரமித்துக்கொள்ளலாம்.

இரத்து செய்தப் பின் எனக்கு எப்படி கிடைக்கும்?

உங்களுக்கு திரும்பக் கிடைக்கும் பணம் பயணத்திற்கு முன் எப்போது டிக்கெட் இரத்து செய்யப்பட்டது என்பதைப் பொறுத்துள்ளது.

இரயில் புறப்படுவதற்கு 119 நாட்கள் – 48 மணி நேரத்திற்கு முன் வரை

இத்தகைய சூழ்நிலையில், பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பைப் பொறுத்து, இரத்து செய்வதற்கான கட்டணங்கள் INR 120-240கழிக்கப்பட்டு பயணிகளுக்கு முழு பணம் திரும்பக் கிடைக்கும்.

இரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்

நீங்கள் 48 மணிநேர காலக்கெடுவை தவறவிட்டுவிட்டீர்கள் என்றால், நீங்கள் இன்னும் குறிப்பிடத்தக்க அளவிலான பணம் உங்கள் கணக்கில் வரவில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், 25%அடிப்படை கட்டண மதிப்பு அல்லது இரத்து செய்வதற்கான கட்டணங்கள் (எது அதிகமாக இருக்கின்றதோ அதன்படி)கழிக்கப்படும்.

4 மணி நேரத்திற்கு முன் அல்லது இரயிலின் இறுதி அட்டவணை தயார் செய்யப்படும் நேரத்தில்

பெரும்பாலும் இறுதி அட்டவணை பயணம் தொடங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் தான் தயார்படுத்தப்படுகிறது. மேலும் இந்திய இரயில்வேக்குபயணிக்காத பயணிகளின் இருக்கைகளை மீண்டும் ஒதுக்கீடுவதற்கான கடைசி வாய்ப்பு இது தான்.எனவே, இறுதி அட்டவணை தயாரிக்கப்படுவதற்கு முன் மற்றும் 12 மணி நேர கால கட்டத்திற்குப் பின், நீங்கள் டிக்கெட்டை இரத்து செய்யும் போது, அடிப்படை கட்டணத்திலிருந்து 50%அல்லது இரத்து செய்வதற்கான கட்டணங்கள் (எது அதிகமாக இருக்கின்றதோ அதன்படி) கழிக்கப்படும்.

மற்ற எந்த சூழ்நிலைகளில் தானாகவே பணத்தை திருப்பிக் கொடுத்தல் செயல்முறைப்படுத்தப்படுகிறது?

WL டிக்கெட்களைத் தவிர சில சூழ்நிலைகள் உள்ளன, இதில் இந்திய இரயில்வே மூலம் உங்கள் முழு டிக்கெட் விலையையும் தானாகவே திருப்பிக்கொடுக்கப்படும்.

இயில் இரத்து செய்யப்படுகிறது:ஏதாவது காரணங்களுக்காக உங்கள் இரயில் இரத்து செய்யப்படுகிறது என்றால், உங்களுக்கு இரயில் டிக்கெட் கட்டணம் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும்.

இரயில் தாமதமாக இயங்குகிறது:நீங்கள் ஏறும் இடத்தில் இரயில் 3 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமானால் உங்கள் இரயில் கடிக்கெட் கட்டணம் முழுவதையும் நீங்கள் திரும்பப் பெறலாம். இவ்வாறு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு நீங்கள் நிலைய மேலாளரின் அலுவலகத்திலிருந்து TDRதாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் இரயில் ஏறினால், பின் TDR வெறுமையாகவும் செல்லுபடியற்றதாகவும் கருதப்படும்.

இரயில் பாதை மாற்றப்படுகிறது:இரயிலின் பாதை மாற்றப்படுகிறது மேலும் நீங்கள் மாற்று பாதையில் பயணிக்க விரும்பவில்லை என்ற போது மூன்றாவது சூழ்நிலை உருவாகிறது. மீண்டும், 72 மணி நேரத்திற்குள் நிலைய மேலாளரின் அலுவலகத்திலிருந்து TDR தாக்கல் செய்ய வேண்டும்.

மற்ற எந்த சூழ்நிலைகளில் டிக்கெட் கட்டணத்தில் பாதி பணம் திரும்பக் கொடுக்கப்படுகிறது?

கட்டணத்திலுள்ள வித்தியாசம் உங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும் சில சூழ்நிலைகள் உள்ளன. இந்தச் சூழ்நிலைகளில் அடங்குபவை:

AC வேலை செய்யவில்லை (AC வகுப்புகளில்): நீங்கள் AC கோச்சில் பெர்த் பதிவு செய்துள்ளீர்கள் மற்றும் AC பழுதடைந்துள்ளது (அல்லதுAC வேலை செய்யவில்லை) என்பதை நீங்கள் கண்டறிகிறீர்கள் என்றால், நீங்கள் அதையே TTE அறிவிக்க வேண்டும். ஆய்வில், AC சரி செய்யப்படும். ஆனால் AC வேலை செய்யவில்லை என்றால், TTE அவர்கள் கட்டணத்திற்கான வித்தியாசத்தை(உங்கள் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு இடையே) திருப்பிக் கொடுப்பார்.

இருக்கை குறைவான வகுப்பில் ஒதுக்கப்படுகிறது: குறைவான வகுப்பில் உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் ஒதுக்கப்படுகிறது என்றால் நீங்கள் முன்னதாக பதிவு செய்த வகுப்புக்கும் தற்போது உங்களுக்கு பெர்த் ஒதுக்கப்பட்டுள்ள வகுப்புக்கும் இடையிலான கட்டண வித்தியாசத்தை நீங்கள் கோரலாம்.

உங்கள் சூழ்நிலையில் பொருத்தக்கூடிய குறிப்பிட்ட விதிகளை நாங்கள் தவறவிட்டிருக்கலாம்,என்று எங்களுக்கு தெரியும், எனவே,உங்கள் கேள்விகளைக் கேளுங்கள் அல்லது அத்தகைய விதிகளை எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நாங்கள் உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here