வழக்கத்திற்கு மாறான காணிக்கைகள் வழங்கப்படும் 6 இந்திய கோவில்கள்

0
714

நம்பிக்கையின் காரணமாக பல்வேறு வழக்கத்திற்கு மாறான வழக்கங்களை மக்கள் நம்புகின்றனர். இந்தியா பல்வேறு கோவில்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்ளைக் கொண்ட நாடாகும். இவற்றுள் சில மிக வினோதாமான வழக்கங்களாகத் திகழ்கின்றன. கடவுளக்கு வினோதமான காணிக்கைகளை பக்தர்கள் வழங்கும் சில கோவில்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Kaal Bhairav Temple

மத்தியப் பிரதேசம், உஜ்ஜயினியிலுள்ள கால பைவரவர் கோவில்: கோவிலுக்கு உள்ளேயும் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மது பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டடது என்றாலும், இங்கு அவ்வாறு கிடையாது. பூக்கள் மற்றும் தேங்காய் தவர்த்து, கால பைரவர் கடவுளக்கு பக்தர்கள் இங்கு மது பாட்டில்களையும் காணிக்கையாக வழங்குகின்றனர். கோவிலுக்கு வெளியிலேயே அவற்றை விற்பனை செய்யும் கடைகள் நிறைந்துள்ளன.

Brahma Baba Temple

உத்திரப்பிரதேசம், பிரம்ம பாபா கோவில்: கரிவாலே பாபா கோவிலுக்கு காணிக்கையாக இங்கு வருகை புரியும் பக்தர்கள் சுவர் கடிகாரங்களை அளிக்கின்றனர். அவ்வாறு செய்வது தங்களது பிரார்த்தனைகளை ஈடேற்றும் என அவர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு நாளும் 80 – 200 கடிகாரங்கள் இவ்வாறு பிரார்த்தனையாக வழங்கப்படுகின்றன.

Hawaijahaj Gurudwara

பஞ்சாப், ஜலந்தர், ஷாஹீத் பாபா நிஹால் சிங் குருத்வாரா: வெளிநாடு செல்ல விரும்பும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை பலிக்க பொம்மை விமானங்களை இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர். இது ஹவாய்ஜாஹாஜ் குருத்வாரா என்றும் அழைக்கப்படுகிறது.

Nagaraja Temple

கேரளா, நாகராஜா கோவில்: பிள்ளைப் பேறு வேண்டி இங்கு பெண்கள் வருகை புரிகின்றனர். பிரார்த்தனை பூர்த்தியடைந்தவுடன், மீண்டும் கோவிலுக்கு வந்து, பாம்பு வடிவ காணிக்கைகளை அளிக்கின்றனர்.

Balaji Mandir

ராஜஸ்தான், மெஹெந்திபூர், பாலாஜி மந்திர்: பேய் பிடித்ததாக நம்பப்படும் மக்கள் இங்கு குணமாக்கப்படுகின்றனர். இதற்கான பக்தர்கள் பூட்டுகளை காணிக்கையாக அளிக்கின்றனர். தீய சக்திகள் அந்த பூட்டில் தங்கி கோவிலுக்கு வெளியிலேயே இருந்து விடும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.

Karni Mata Temple

ராஜஸ்தான் தேஷ்நோக்கில் அமைந்துள்ள கர்னி மாதா கோவில்: இக்கோவில் அதிகளவிலான எலிகள்வ சிப்பதற்காக பெயர் பெற்றதாகும். தங்கள் பிரார்த்தனை பலித்த பக்தர்கள் வெள்ளியில் எலி உருவம் செய்து காணிக்கையாக அளிக்கின்றனர். கோவிலில் இருக்கும் ஏதேனும் புனித எலி இறந்துவிட்டால், அதற்கு பதிலாக தங்கத்தில் உருவச்சிலை செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here