வழக்கத்திற்கு மாறான தெய்வங்களைக் கொண்ட 8 இந்திய கோவில்கள்

0
670

பல்வேறு மதரங்கள் நிறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது. ஆதிசக்தியை பல்வேறு வடிவங்களில் வணங்கும் முறைகளை நாம் கொண்டுள்ளோம். இந்தியாவில் பல இலட்சம் வழக்கமான கோவில்கள் இருப்பினும், சில வழக்கத்திற்கு மாறான கோவில்களும் உள்ளன.

Ravana-Temple-in-Ravangram

1. மத்தியப்பிரதேசம் ரவாங்கிரம், ராவணன் கோவில்: சீதா மாதாவை ராமாயணத்தில் கடத்தியதாக ராவணன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், விதிஷா மாவட்டத்திலுள்ள, ரவாங்கிரம் என்னும் ஒரு சிறிய கிராமத்தில், ராவணன் வணங்கப்படும் தெய்வமாக வீற்றிருக்கிறார். படுத்த நிலையில் ராவணனின் 10 அடி சிலை இங்கு அமைந்துள்ளது.

Hadimba-Temple-in-Manali

2. ஹிமாச்சல பிரதேசம், மணலி, ஹடிம்பா கோவில்: பீமனின் மனைவியும் மற்றும் கடோத்கஜனின் தாயுமான ஹடிம்பா தேவிக்காக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. நீடித்த தியானம் மேற்கொண்டு ஆன்மசாந்தி பெற்றார் ஹடிம்பா என இங்குள்ளவர்கள் நம்புகின்றனர். கோவில் எத்தகைய சிலையும் கிடையாது. பக்தர்கள் இரண்டு பெரிய அளவிலான கால்தடங்களை வணங்குகின்றனர்.

Peruviruthy-Malanada-Temple-in-Poruvazhy

3. கேரளா, பொருவழி, பெருவிருத்தி மலந்தா கோவில்: துரியோதனன் இக்கோவிலில் வணங்கப்படுகிறார். அற்புதமான கேரள கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோவில் சிலைகள் எதுவும் கிடையாது. உயர்ந்த நிலையில் “மண்டபம்” என்று அழைக்கப்படும் பகுதி மட்டுமே. மக்களின் நலனுக்காக துரியோதனன் சிவபெருமாளை வேண்டிக்கொண்டதால், அவை புண்ணிய ஆத்மாவாக இங்குள்ளவர்கள் கருதுகின்றனர்.

Bullet-Baba-Temple-in-Jodhpur

4. ராஜஸ்தான், ஜோத்பூரில் அமைந்துள்ள புல்லட் பாபா கோவில்: பக்தர்கள் இக்கோவிலில் ஒரு 350 சிசி ராயல் என்ஃபீல்டு புல்லட்டை வழிபடுகின்றனர். இந்த மோட்டார்சைக்கிளுக்கு உரிமையாளரான ஓம் பன்னா அவர்கள் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார். அந்த இடத்திலிருந்து காவல் துறையினர் மூன்று முறைகள் புல்லட்டை அகற்ற முயற்சித்த போதும், புல்லட் மீண்டும் அதே இடத்தில் தோன்றியதையடுத்து இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.

5. உத்திரப்பிரதேசம், ஹர்தாய் சாலையில் அமைந்துள்ள கம்சன் கோவில்: இந்து புராணங்களில் தனது தங்கை மற்றும் மைத்துனனை, தனது உயிரைக் காத்துக் கொள்ளும் வகையில் சிறையில் அடைத்து கொடுமை செய்த அசுரனாக கம்சன் சித்தரிக்கப்படுகிறார். ஆனால், ஹர்தாயிலுள்ள இக்கோவிலில் கம்சன் கடவுளாக வணங்கப்படகிறார். இந்த இடத்தில் அமர்ந்து கம்சன் தியானம் செய்ததாக கிராமவாசிகள் நம்புகின்றனர்.

Nagaraja-Temple-in-Mannarasala

6. கேரளா, மண்ணராசலாவில் அமைந்துள்ள நாகராஜா கோவில்: பாம்பு தெய்வம் அல்லது நாகராஜாவிற்கு பல்வேறு கோவில்கள் இருப்பினும், இது இந்தியாவில் அவ்வாறு அமைந்துள்ள மிகப்பெரிய கோவிலாகும். பிள்ளைப் பேறு வேண்டும் பெண்களுக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாகத் திகழ்கிறது. கோவில் வளாகத்திற்குள் 30000 பாம்பு சிலைகள் உள்ளன.

Dog-Temple-in-Channapatna

7. கர்நாடகா சென்னபட்னாவில் அமைந்துள்ள நாய் கோவில்: இந்த வழக்கத்திற்கு மாறான கோவில் 2009 – ம் ஆண்டு நாய்கள் மற்றும் அதன் நம்பிக்கை தன்மைக்கு மரியாதை செய்யும் வகையில் அமைக்கப்பட்டது. கோவிலுக்கு இரண்டு நாய்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் கிராமத்தை காப்பதாக உள்ளுர்வாசிகள் நம்புகின்றனர்.

Bharat-Mata-Temple-in-Haridwar

8. உத்திரகண்ட், ஹரித்வாரில் அமைந்துள்ள பாரத மாதா கோவில்: நமது நாட்டை பெண் தெய்வமாக வெளிப்படுத்தும் இக்கோவில், 1983 – ம் ஆண்டு ஸ்வாமி சத்யமித்ரானந்த் கிரி அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த 8 மாடிகள் கொண்ட கட்டிடத்தில், பாரத மாதா சிலை கையில் இந்திய கொடியை பிடித்தபடி குங்குமப்பூ வண்ண புடவை அணிந்தவாறு காட்சியளிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here