மும்பையிலிருந்து வெறும் 100 கிமீ இருக்கும் துரித பயணத்திற்கான அமைவிடங்கள்

0
654

தூங்கா நகரம் என்ற பெயர் மும்பைக்கு மிகுவும் பொருத்தமானதாகும். அங்கிருந்து வெகு அருகாமையில் சில மணி நேர பயணத்தில் அழகான மலைவாசஸ்தலம், நெரிசலான போக்குவரத்து மற்றும் நகர அழுக்குகள் இன்றி இருப்பதை நீங்கள் அறிவீர்களா?

கோபோலி

மும்பைக்கு தெற்கில் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோபோலி ஒரு தொழி;ல் துறை நகரமாகும் மற்றும் இது தேசிய நெடுஞ்சாலை 4 (மும்பை – பூனா – பெங்களுரூ நெடுஞ்சாலை) – ல் சயாத்ரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. வருடம் முழுவதும் இங்கு வருகை தரலாம் என்றாலும், கோபோலிக்கான சிறந்த காலகட்டம் மழைக்கடவுள் தனது அருட்பார்வையைப் பொழியும் காலகட்டமே. பனியும் மற்றும் மழையும் சூழ்ந்த இந்த மலைவாசஸ்தலம் அதிசிறந்த தோற்றத்தைக் கொண்டிருக்கும். கோபோலியிலுள்ள சுற்றுலா அமைவிடங்கள்

Kalote Lake

ஜெனித் நீழ்வீழ்ச்சிகள்: இந்த 25-அடி உயரத்தில் அமைந்துள்ள நீழ்வீழ்ச்சியானது ஒரு பிரபலமான பாறையேற்றம் மற்றும் ராப்பெல்லிங் சேருமிடமமாக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் திகழ்கிறது.

கலோட் ஏரி: இந்த இயற்கையான, அமைதியான மலைகள் சூழ்ந்த ஏரியானது, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பொழுது போக்கினை மேற்கொள்வதற்கான சிறந்த அமைவிடமாகும். மேலும் இங்கிலிருந்து 1 கிமீ தொலைவில், மழைக்காலங்களில் தோன்றும் கலோட் நீர்வீழ்ச்சி என்னும் ஒரு நீழ்வீழ்ச்சியும் உள்ளது.

Ballareshwar Temple

அஷ்டவினாயக் கோவில்: ஆன்மீக ரீதியில் ஆர்வம் கொண்டவர்கள், எட்டு அஷ்டவினாயக் கோவில்களில் இங்கு அமைந்துள்ள இரண்டு கோவில்களான வினாயக் மஹத் மற்றும் பாலரேஷ்வர் கோவில்களை அனுபவித்து மகிழலாம்.

இமேஜிகா:

இமேஜிக என்பது, 300 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்திருக்கும் ஒரு உலகத்தரத்திலான தீம் பார்க் ஆகும். பல்வேறு ரைடுகள் மற்றும் நீர் விளையாட்டுகளை நீங்கள் இங்கு அனுபவித்து மகிழலாம். இங்கு ஒரு ஸ்நோ பார்க்கும் உள்ளது.

கம்ஷெட் மேற்கத்திய மலைத்தொடரின் தஞ்சமடைந்துள்ள, மும்பையிலிருந்து 110 கிமீ தொiவிலுள்ள கம்ஷெட், மலைவாசஸ்தலம் என்னும் உணர்வை விட, கிராமம் போன்றதொரு உணர்வை சிறப்பாகத் தரும். இங்கு வருகை தருவதற்கான சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆகும். சிறப்பான இயற்கை வளங்கள், அமைதியான ஏரிகள் மற்றும் மலைகள், உங்களை புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த இடமாகத் திகழ்கிறது. எனவே, நீங்கள் கம்ஷெட்;டில் செய்யக்கூடியவைகள்:

Vadivali Lake

பாராகிளைடிங்: இந்தியாவின் முதல் 10 சாகச அமைவிடங்களில் ஒன்றாகத் திகழும் இந்த அமைவிடம், பாராகிளைடிங் செயல்பாடுகளுக்காக பெயர் பெற்றதாகும். பாவ்னா ஏரியின் மீது பயணித்து, பறவை பார்வையில் கம்ஷெட்டைப் பார்ப்பது ஒரு அற்புதமான உணர்வாகும். அக்டோபர் முதல் மே வரை, பாராகிளைடிங்கிற்கு ஏற்ற காலகட்டமாகும்.

Dhak Bahiri Fort

தக் பாஹிரி கோட்டை: ராய்கத் மாவட்டத்திலுள்ள இந்த மலைக்கோட்டை தகுர் ஆதிவாசிகளின் கடவுளான பைரி கடவுளுக்காக அர்பணிக்கப்பட்ட கோட்டையாகும். இது பண்டைய காலங்களில் சுற்றுப்புறங்களின் பாதுகாப்பிற்காக மேலே 5-6 தண்ணீர் சிஸ்டர்ன்கள் மற்றும் இரண்டு தண்ணீர்  சிஸ்டர்ன்கள் கொண்டதொரு குகை ஆகியவைகளை உள்ளடக்கியது. இங்கு குகைக்குள் பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை திருடுபவர்கள் பைரி கடவுள் தண்டிப்பார் என உள்ளுர்வாசிகள் நம்புகின்றனர். 2700 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள இக்கோட்டைக்கு டிரக்கிங் மேற்கொள்வது சுலபமான விஷயமல்ல. பாதையும் மிகவும் கடுமையானதாக இருக்கும் மேலிருந்து நீங்கள் ராஜ்மாசி, டியூக்ஸ் நோஸ், மனிக்கட், கர்னலா, பீமசங்கர், விசாபூர் போன்ற பகுதிகளை கண்டுமகிழலாம்.

அடைவது எப்படி?

சரியான ரயில் நிலையம் லோனாவாலா (இங்கிருந்து 8 கிமீ தொலைவில் கபோலி மற்றும் 16 கிமீ தொலைவில் கம்ஷீட் அமைந்துள்ளது) ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here