கல்பாத்தி: தென்னிந்திய காசியின் தனித்துவமிக்க ஈர்ப்புகள்

2
2609

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்பாத்தி, பாரம்பரிய கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம், ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி ஆலயத்திற்காக பெயர் பெற்றதாகும். இங்கு ஆண்டிற்காருமுறை தேர் திருவிழா நடத்தப்படுகிறது. இயற்கை அழகு நிறைந்த கல்பாத்தி, எல்லா வகைகளிலும் சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்கிறது. இத்தனித்துவமிக்க கிராமத்தை நாம் சற்று சுற்றிப்பார்க்கலாம்.

அற்புதமான அக்ரஹாரங்கள்

Agraharams

கல்பாத்தியைச் சேர்ந்த பார்ப்பனாகள் குடியிருக்கும் பகுதி அக்ரஹாரம் ஆகும். ஒவ்வொரு வீடும் ஒரு குறிப்பிட்ட கட்டுமான பாங்கினைக் கொண்டிருக்கும். பொது சுவர்கள், சரிவான கூரைகள், ஒருங்கமைந்த கிழக்கு-மேற்கு மற்றும் எதிர் திசை தன்மைகள் பிரத்தியேக அம்சமாகும். குழந்தைகள் விளையாடுமிடம், விழாக்கால அரங்குகள் மற்றும் சேமிப்பு அறைகள் போன்றவைகளை  கொண்டிருக்கும் வகையில் இந்த அக்ரஹாரம்கள் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

அக்ரஹாரம்

Agrahara

பார்ப்பனர்களின் குடியிருப்பு பகுதியான அக்ரஹாரம், புது கல்பாத்தி, பழைய கல்பாத்தி, சத்தாபுரம் மற்றும் கோவிந்தராஜபுரம் என பல பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. பழைய கல்பாத்தியில் ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் ஆலையமும், சத்தாபுரத்தில் பிரசன்ன மஹா கணபதியும், கோவிந்தராஜபுரத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலையமும் மற்றும் புதிய கல்பாத்தியில் மந்தகார மஹா கணபதி ஆலையமும் அமைந்துள்ளன. இந்த அக்ரஹாரத்தில் குடியிருப்போர், இக்கோவில்கள் பார்ப்பன வழக்கங்கள் மற்றும் கட்டுமானங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதாக கருதுகின்றனர்.

ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி ஆலயம்

Temple in Kalpathy

உள்ளுரில் “குண்டு கோவில்” என அழைக்கப்படும் ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி ஆலயத்தில் கடவுள் சிவ பார்வதி வீற்றிருக்கின்றனர். மலபார் பிராந்தியத்தின் மிகப்பழமையான சிவாலயமாகத் திகழும் இக்கோவில், கல்பாத்தி ஆற்றங்கரையோரம் அமைந்த பிரபலமான கோவிலாகத் திகழ்கிறது. 18 படிகளுக்கு கீழ் அமைந்துள்ளதால், இக்கோவில் குன்டம்பலம் என்று அழைக்கப்படுகிறது.

கல்பாத்தி ரதோத்ஸவம் அல்லது கல்பாத்தி தேரு

Rathotsavam

நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் (இந்த ஆண்டு நவம்பர் 8 – 10) நடத்தப்படும் இத்திருவிழா, இந்த சிறிய கிராமத்தில் நடைபெறும் மிகப்பெரிய நிகழ்வாகும். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்நிகழ்வில், கல்பாத்தியின் 4 கோவில்களிலிருந்து கிளம்பும் 4 தேர்களும் ஒருங்கிணைந்த கிராமத்து வீதிகளில் வலம் வரும். முதன்மை தேரில் சிபபெருமானும் மற்றும் அடுத்த 2 சிறிய தேர்களில் அவரது புதல்வர்களும் வலம் வருவர். மற்ற கிராமங்களைச் சேர்ந்த தேர்கள் ஒருங்கிணைந்து தேவார்த்த சங்கமத்தை உருவாக்கும். இங்கு நடைபெறும் சங்கீதோத்ஸவம் நிகழ்வு பெயர் பெறற்தாகும். உலகம் முழுவதிலுமிருந்தும் பங்கேற்கும் பிரபல இசைகலைஞர்கள் மற்றும் பாடகர்கள் இங்கு சன்தானம் பெறாமல் பாடுவதை பெருமையாகக் கருதுகின்றனர்.

கல்பாத்தியை அடைவது எப்படி?

  • அருகாமையிலுள்ள நகரம்: பாலக்காடு (3 கிமீ தள்ளி)
  • அருகாமையிலுள்ள இரயில் நிலையம்: பாலக்காடு சந்திப்பு (1 கிமீ தள்ளி)
  • அருகாமையிலுள்ள விமானநிலையம்: கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையமாகும் (55
  • கிமீ தள்ளி)

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here