கர்ப்ப காலத்தில் இரயிலில் பயணிப்பது எவ்வளவு பாதுகாப்பானது?

0
3148

நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது போன்ற சிரமங்கள் இருப்பதால் கர்ப்ப காலத்தில் பயணிப்பதை தவிர்ப்பது சிறந்தது. எனினும், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியே இருக்காது. இன்றைய வேகமான வாழ்க்கைமுறையில், தாய்மார்கள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புக்கு எந்த விதமான வாய்ப்புகளும் இல்லை. கர்ப்ப காலத்தில் இரயிலில் பயணிப்பது குறித்து நாம் மீண்டும் மீண்டும் கேள்விகள் பெறுவதன் மூலம், இதற்கான நல்ல அறிகுறி நமக்கு கிடைக்கிறது. எனவே, நாங்கள் விசுவாசமான இரயில்யாத்திரிகள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள சில கேள்விகளுக்கு பதிலளிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.

கர்ப்ப காலத்தில் இரயிலில் பயணிப்பது எவ்வளவு பாதுகாப்பானது?
எந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் இரயில் பயணம் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறையாகும். சாலை பயணங்களில் புடைப்புகள், திடீர் வளைவுகள் உள்ளன மேலும் திடீரென்று முன்னோக்கி தள்ளப்படுதற்கான (பிரேக்குகள் பயன்படுத்தப்படும் போது) வாய்ப்பு உள்ளது. சில விமான நிறுவனங்கள் கர்ப்ப காலத்தின் சில கட்டங்களில் (சுகாதார ஆபத்து காரணமாக) பறக்க கர்ப்பிணி பெண்களை அனுமதிப்பது இல்லை. எனவே, இரயில்கள் அவற்றின் மென்மையான அசைந்தாடும் இயக்கத்துடன் தாய் மற்றும் உள்ளிருக்கும் குழந்தை இருவருக்கும் சிறந்தது. எனினும், பயணிப்பதற்கு முன் உங்களுடைய மருத்துவருடன் ஆலோசிப்பது கட்டாயமானது.

நான் எந்த வகுப்பை(கிளாஸ்) தேர்வு செய்ய வேண்டும்?

Train travel during pregnancy
கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் (6 மாதங்களுக்குப் பின்னர்), குலுக்கல் மற்றும் திடீர் நகர்வுகள் தாய் மற்றும் கருவின் சுகாதாரத்திற்கு நல்லதல்ல. மேலும், தாய் செளகரியமாக இருப்பதற்கு அவளுக்கு போதுமான அளவு திறந்தவெளி இடம் தேவை. இதனால் தான் அத்தகைய பயணங்களுக்கு AC 3 அல்லது 2 டயர் பெட்டிகள் சரியான வகுப்பு தேர்வுகளாகும். இதனால் தான், கர்ப்பிணி பெண்ணுடன் பயணிக்கும் போது பயணத் தேதிக்கு முன்னதாகவே திட்டமிடுவது அவசியம். நீங்கள் லோயர் பெர்த் இருக்கைகளை மட்டுமே பதிவு செய்வதை உறுதி செய்யவும், எனவே கர்ப்பிணி பெண் ஏற வேண்டிய அவசியம் இருக்காது.

பயணித்தின் போது நான் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன ?
அத்தகைய பயணத்தில் கனரக சமான்களைத் தூக்குவது பொதுவான தொந்தரவாக இருக்கிறது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் எந்த வகையான சமான்களையும் தனிப்பட்ட முறையில் தூக்குவதை தவிர்க்க வேண்டும். கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க போதுமான அவகாசத்துடன் நீங்கள் இரயில் நிலையத்திற்கு வருவதை உறுதி செய்யவும். தாய் ஒவ்வொரு அடியிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இது குறிப்பாக நெரிசலான நிலையங்களில் முக்கியமானது. மேலும், தாய் அதிக அளவில் குனியாமல் இருப்பதை உறுதி செய்யவும். குனிவது வயிற்றில் அழுத்தம் கொடுக்கும் இது குழந்தைக்கு நல்லதல்ல.

பயணத்தின் போது நான் என்ன உணவு சாப்பிட வேண்டும்?

Tips-to-travel-during-Pregnancy_3
பயணத்திற்காக கண்டிப்பான உணவுமுறையைப் பராமரிப்பது முக்கியமானது. இரயில் நிலையத்தின் கடைகள் அல்லது வீதிகளில் விற்பனை செய்பவர்களிடமிருந்து உணவை சாப்பிட வேண்டாம் அவைகள் எவ்வளவு ஈர்க்கக்கூடியவைகளாக இருந்தாலும். எப்போதுமே புகழ்பெற்ற சேவை வழங்குனரிடம் உணவை பதிவு செய்து காரமில்லாத, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை கேளுங்கள். உங்களுக்கு பசி எடுத்தால், சில பழங்களை சாப்பிடவும் (ஆனால் அவைகள் முன்கூட்டியே நறுக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும்). உங்களை நீங்களே நல்ல நீரேற்றத்துடன் வைத்திருக்க பேக்கேஜ் செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்களை வாங்கவும் மற்றும் எடுத்துச்செல்லவும்.

கர்ப்ப காலத்தில் நான் ஏன் தனியாக பயணிக்க முடியாது?
கர்ப்ப காலத்தின் பிற்பகுதி திடீரென்று பல சுகாதார பிரச்சனைகள் ஏற்படக்கூடிய மிகவும் தந்திரமான நேரமாகும். அத்தகைய நேரங்களில் உங்களுக்கு எப்போதுமே துணை தேவை. சமான்களைத் தூக்குவதிலிருந்து கழிவறைக்கு செல்லுவது வரை, நீங்கள் தொடர்ந்து துணையை சார்ந்திருக்க வேண்டும். அத்தகைய பயணத்தில் உங்களுடைய பொறுப்பு என்னவென்றால் போதுமான அளவு ஓய்வெடுத்து கொண்டு உங்களுடைய நடவடிக்கைகள் எதுவும் எதிரிடையாக கருவை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மற்ற குறிப்புகள்

Tips-to-travel-during-Pregnancy_4

  • தாய் செளகரியமான நிலையில் உட்கார வேண்டும்
  • நீங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அதிக நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டாம். சாத்தியமான போதெல்லாம் படுத்துக்கொள்ளுங்கள்
  • இரயில் பெட்டிகளுக்குள்ளே அவ்வப்போது உலாவவும். இது உங்களுடைய இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
  • எப்போதுமே அவசியமான மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துச்செல்லவும். அவற்றை எளிதில் அணுகக்கூடிய பையில் வைக்கவும்.

எளிதாக, உண்மையிலேயே எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள்
நீங்கள் பயணிக்கும் போது அனைத்து பதட்டங்களையும் ஒதுக்கிவிடுங்கள். உட்கார்ந்து குழந்தையுடன் உங்களுடைய முதல் பயணத்தை அனுபவிக்கவும். இனிமையான இசை கேட்டுக் கொண்டு ஓய்வெடுங்கள். பயணத்தில் நிதானமாக மெல்லுவதற்கு உங்களுக்கு விருப்பமான சாக்லேட்கள் அல்லது தின்பண்டங்களை நீங்கள் எடுத்துச்செல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here