ஃபில்மி எஸ்கேப்: பாலிவுட் வழியாக பயணம் செய்தல்

0
602

பாலிவுட் திரைப்படங்கள் நமக்கு வெறும் பொழுதுபோக்கு அல்ல. நமது பல உணர்வுகளின் வடிகாலாகவும் மற்றும் தூண்டியாகவும் அது திகழ்கிறது. அன்புசெலுத்தவும், வெறுக்கவும், அக்கறை கொள்ளவும் மற்றும் இரயிலில் பயணம் செய்யவும் அவைகள் நமக்கு கற்பிக்கின்றன. பாலிவுட் திரைப்படங்களை பார்த்து நீங்கள் வளர்ந்திருந்தால், நமது திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் “காட்சிப்பொருட்களில்” இரயிலை விட சிறந்த ஒன்று இல்லை என்பதை நிச்சயமாக ஒத்துக்கொள்வீர்கள். இந்திய இரயில்கள் திரைப்படம் எடுப்பவர்களுக்கும் மற்றும் இரசிகர்களுக்கும் எப்போதும் உற்ற துணையாகத் திகழ்ந்துவருகிறது.

கீழ்காணும் திரைப்படக் காட்சிகள், இரயில்களின் துணையோடு உங்கள் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பிடித்தவையாகும் மற்றும் எவர் அறிவர்? அவற்றுள் சில உங்களது அடுத்த இரயி;ல் பயணத்தை திட்டமிடவும் தூண்டலாம்.

Filmy escape: Travel through Bollywood

  • தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே: அம்ரிஷ் பூரி ஆப்தா இரயில்வே நிலையத்தில் கூறும் “ஜா சிம்ரன் ஜா, ஜீ லே அப்னி ஜிந்தகி” என்றும் பிரபலமான வசனத்தை எவரும் மறக்க முடியாது. இந்த அற்புதமாக காட்சி, பாலிவுட் படங்களில் இரயில்கள் குறித்து நினைவுகளில் எப்போதும் முதலிடம் பிடிப்பதாகும்.

Filmy escape: Travel through Bollywood

  • சென்னை எக்ஸ்பிரஸ்: ரோஹித் ஷெட்டி அவர்களது இந்த நகைச்சுவை மற்றும் திருப்பங்கள் நிறைந்த கதையில், நமது கவனத்தை மிகவும் ஈர்த்தது ஒரு அற்புதமான இரயில் காட்சியாகும். டிடிஎல்ஜே திரைப்படத்தை நினைவு படுத்தும் வகையில் மீனா (தீபிகா படுகோனே) கஜோலாக இரயிலை பிடிக்க ஓடிவரும் காட்சி அமைந்திருக்கும். மற்றொரு முக்கிய காட்சியாக நினைவில் நிற்பது, மீனா மற்றும் ராஜ் இடையே அந்தாக்ஷரி போர்வையில் நிகழும் பேச்சுவார்த்தை.

Filmy escape: Travel through Bollywood

  • ஜப் வி மெட்: இந்த காதல் நகைச்சுவை திரைப்படத்தில் ஷாஹித் மற்றும் கரீனா நமக்கு கீத் மற்றும் வட இந்தியாவின் மிகச்சிறந்த அமைவிடங்கள் மீது காதல் கொள்ளச்செய்தன. மும்பை முதல் பதின்டா வரையிலான இந்த பயணத்தின் வழியாக, ஜப் வி மெட், நம் அனைவரையும் பயணம் செய்யத் தூண்டியதுடன், இரயில்களின் மீது காதல் வயப்படவும் செய்தது.

Filmy escape: Travel through Bollywood

  • பர்னிங் டிரெய்ன்: ஆம், இந்த 1980 – ம் ஆண்டு பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி பெற்ற திரைப்படம், இன்றைய நாள் வரை, இரயிலில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படமாகும். இரயில்வே நமது பொருளாதாரத்தில் கொண்டுள்ள மிகப்பெரிய தாக்கத்தினை வெளிப்படுத்தும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இப்போதும் இரயில்கள் பாலிவுட் திரைப்படங்களில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இத்திரைப்படம் அன்றாட இரயில் பயணிகளின் பொதுவான அம்சங்கள் மற்றும் தனிநபர்கள் கதைகளை ஒருங்கிணைந்த ஒரு சிறந்த படைப்பாகத் திகழ்கிறது.

Filmy escape: Travel through Bollywood

  • தில் சே: இத்திரைப்படம் ஒரு தீவிரமான கதையைக் கொண்டிருப்பினும், இரயில் தோன்றும் ஒரு அற்புதமான பாடல் காட்சி மிகுந்;த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஓடும் இரயிலில் ஷாரூக்கான் மற்றும் மலைகா அரோகா இணைந்து ஆடிய அந்த பாடல், ஒட்டுமொத்த தேசத்தையும் ஆடச்செய்தது என்றால் அது மிகையற்ற. இயற்கையின் அழகு, சிறப்பான நிலவியல்கள் மற்றும் தேசியலைத் தோட்டங்களின் பேரழகு இப்பாடல் முழுவதும் பிரதிபலிக்கும் வகையில் படம்பிடிக்கப்பட்டிருந்தது.

Filmy escape: Travel through Bollywood

  • பஜ்ரங்கி பாய்ஜான்: ஒற்றை வார்த்தையின் வழியாக நமது இதயத்தை கொள்ளை கொண்ட முன்னியை மறக்க முடியுமா? இத்திரைப்படம் சில திரைப்படங்களால் மட்டுமே சாத்தியமான ஒரு விஷயத்தை மேற்கொண்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு ஆன்மாக்களை இத்திரைப்படம் ஒருங்கிணைத்தது. அத்தாரி பார்டர் இரயில்வே நிலையக் காட்சி மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இரயில் காட்சிகள் எழுப்பிய உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

Filmy escape: Travel through Bollywood

  • ஸ்வதேஷ்: ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படம் இப்பட்டியலில் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒன்றாகும். பயணம், காதல், தத்துவம் மற்றும் எஸ்ஆர்கே ஒருங்கிணைந்த இத்திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட்டா அமைந்தது. எனினும், பல மில்லியன் இந்தியர்களை இத்திரைப்படத்தில் கவர்ந்த காட்சி, இரயி;ல் பயணத்தின் வழியாக இந்தியாவின் அழகை கண்டுணரும் மோஹன் பக்வாத் தனது மனதை மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே தங்க முடிவெடுக்கும் காட்சியாகும். ஒவ்வொரு “ஸ்வதேஷி” – ஐயும் உத்வேகப்படுத்தும் காட்சியாக இது அமைந்தது என்றால் அது மிகையல்ல.

Filmy escape: Travel through Bollywood

  • பரினீதா: விதயா பாலன் மற்று; சயீஃப் அலி கான் நடித்த “பரினீதா” திரைப்படத்தில் மலைகளின் அழகை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த “கஸ்தோ மஸா ஹை ரெயிலைமா” பாடல், இன்றளவும் இரயில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு விருப்பமான பாடலாகத் திகழ்கிறது.

எனவே, ஏன் நீங்கள் மற்றொரு மிகச்சிறந்த கதையை உண்டாக்கும் வகையில் உங்களது அடுத்த இரயில் பயணத்தை மேற்கொள்ளக்கூடாது – இந்த முறை அது உங்கள் கதையாகலாம் அல்லவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here