சென்னை மெட்ரோ: இன்னும் அதனுடைய குறிக்கோளை எட்டவிருக்கிறது

0
766

தொடங்கியதிலிருந்து, சென்னை மெட்ரோ பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுள்ளது. மெட்ரோ நல்லபடியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது, இரயில் நிலையங்கள் மிகவும் சுத்தமாக இருக்கின்றன. இதுவே விருப்பமான பொது போக்குவரத்து முறையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனினும் தற்போதைய சூழ்நிலை மாறுபட்ட காட்சியை காட்டுகிறது.

பிரகாசமான ஆரம்பம்:

Chennai Metro Gates
ஆரம்பத்தில், சென்னை மெட்ரோ 7 இரயில் நிலையங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது, ஆனால் இன்னும் அதிக இடங்களை உள்ளடக்குவதற்கான திட்டம் இருந்தது. உள்ளூர்வாசிகள் குளிர்சாதன இரயில்கள், டோக்கன்கள் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள். இது சென்னை வாசிகளுக்கு ஒரு உல்லாசப் பயணம் போலிருந்தது.

இறக்கம்
உற்சாகம் விரைவில் மங்கிவிட்டது, பொதுமக்கள் உள்ளூர் இரயில்கள், MRTS மற்றும் பேருந்துகளையே விரும்பியதால், இப்போது மெட்ரோ இரயில் நிலையங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. சென்னை மெட்ரோ பொதுமக்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளாப்படாமல் இருப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன:

  • இது மற்ற போக்குவரத்து முறைகளை விட விலை உயர்வானது.
  • ஏழு இரயில் நிலையங்களை மட்டுமே இணைக்கிறது, இதை ஒரு முழுமையான பொதுப் போக்குவரத்து அமைப்பு என்று பெயரிடுவதற்கு குறையாகவே இருக்கிறது.

விலை உயர்வான திட்டம்

Chennai Metro running
சென்னை மெட்ரோ மற்றும் பிற போக்குவரத்து முறைகளின் இடையே விலையில் உள்ள பெரிய வித்தியாசமே இதை ஒரு பொது போக்குவரத்து முறையாக ஏற்றுக்கொள்வதில் இடையூறாக இருக்கிறது. பேருந்துகளும் ஷேர் ஆட்டோக்களும் உடனடியாக கிடைக்கின்றன.

குறிப்பிட்ட இடங்களை மட்டுமே சென்றடைகிறது
விலைகள் குறைக்கப்பட்டாலும், குறைந்த அளவிலான இணைப்பு இன்னொரு பிரச்சினையாகும். மெட்ரோ அதனுடைய சேவையை அதிக வழித்தடங்களுக்கு நீட்டித்து, எல்லோரும் அணுகக்கூடிய விலையில் அமைக்கப்பட்டால், இது நிச்சயமாக வெற்றிபெறும்.

பெருஞ்சிறப்புற்ற தருணம்

Chennai Metro & floods
2015 சென்னை வெள்ளத்தில், ஆற்றின் மேல் இருக்கும் மெட்ரோவின் உயர்வான தடங்கள் அதனுடைய சீரான ஓட்டத்திற்கு உதவி செய்து, கரைகள் முழுவதும் பொதுமக்களை இணைத்தது. கடந்த ஒரு வருடத்தில் இது சென்னை மெட்ரோவின் ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

இந்த அமைப்பு பயணிப்பவர்களின் விருப்பமான போக்குவரத்து முறையாக மாறுவதற்கு நீண்ட காலம் ஆகும்.

Originally written by Gomathi Shankar. Read here.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here