இந்த மழைக்காலத்தில் மலர்களின் பள்ளத்தாக்கை ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்

0
2015

சக்தி வாய்ந்த மலைகள் மற்றும் பனி-அலங்கரிக்கும் சிகரங்களால் கட்டமைக்கப்பட்டு தென்றலில் சிற்றலைகளுடன், வெய்யிலான நாளில் உயரமான காட்டுப்பூக்களின் குத்துயரமான புல்வெளிகள் அற்புதமான காட்சி! இந்தப் படத்தின் சரியான சேரிடம் பல வண்ணங்களைக் கொண்டிருப்பதால் இங்கே நீங்கள் செலவிடும் நேரம் நீங்கள் படங்களை அமைப்பதற்கு போதுமானதாக இருக்காது.

Valley of Flowers

• இந்தியாவின் மிக அழகான தேசிய பூங்கா

கடல் மட்டத்திற்கு மேலே சுமார் 3,858 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள, மலர்கள் பள்ளத்தாக்கு UNESCO உலக பாரம்பரியமான தளமாகும். இது கிழக்கு மற்றும் மேற்கு இமாலய தாவரவளங்கள் இடையே மாறுகின்ற மண்டலத்தில் உள்ளது. நந்தாதேவி உயிர்க்கோள சரணாலயத்தின் பகுதி, காங்க்ரியாவிலிருந்து மலர்கள் பள்ளத்தாக்கை நோக்கிய மலையேற்றத்தில்,  நறுமணமுள்ள காட்டுப்பூக்கள், காட்டு ரோஜா புதர்கள் மற்றும் காட்டு ஸ்டிராபெர்ரிகள் வரிசையாக நிறைந்துள்ளது.

Discover an abundance of bio-diversity

• மிகுதியான உயிரி பன்முகத்தன்மையை கண்டறியவும்

300-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் மேலும் அருகிவரும் மலர்கள் மற்றும் மருத்துவ தாவரங்களின் பல இனங்களுடன், பள்ளத்தாக்கு பனி மூடிய இமய மலையின் கண்களின் கீழ் தெளிவான வண்ணங்களின் எண்ணற்ற இணைப்பு. ஆசிய கருப்பு கரடி, சிவப்பு நரி மற்றும் நீலமான செம்மறி ஆடு போன்ற சில அருகிவரும் விலங்குகளை தடங்களில் சுற்றி பார்க்கலாம்.

Valley of Flowers trek

• கண்ணைக் கவருகிற இமாலய மலையேற்றத்தில் நடக்கவும்

பள்ளத்தாக்குக்குச் செல்லுகின்ற அனுபவம் சற்று கடினமானது ஆனால் பள்ளத்தாக்கின் காட்சி பெரிய உற்சாக வேகத்திற்கு உத்தரவாதமளிக்கிறது. இந்தப் பாதையை சுற்றிப்பார்க்க 4-5 நாட்கள் மலையேற வேண்டும். கோவிந்தகட்டில் அமைந்துள்ள  அதனுடைய அடித்தள முகாம், ஹரித்வார் / ரிஷிகேஷிலிருந்து தொடங்கி, அதனுடைய முக்கியமான முகாம், காங்க்கிரா வழியாக மலர்கள் பள்ளத்தாக்குக்கு மலையேற வேண்டும்.

Nature at its best

• இயற்கை சிறப்பாக இருக்கும் இடம்!

இந்த சரணாலயத்தின் உள்ளே நுழைவது உங்களை வசீகரிப்பதற்கு போதுமானது. குறுகலான பாதைகள், கற்பாறைகள், சிறிய நீரோடைகள், அலையாக விழும் நீர்வீழ்ச்சிகள் மேலும் இரு பக்கங்களுக்கும் எதிராக பள்ளத்தாக்கை பாதுகாப்பது போன்று வலிமையான உயரமாக நிற்கும் பெரிய இமாலயன் மற்றும் ஜான்ஸ்கர் மலைத்தொடர்கள், உங்களுக்கு பிரமிப்பூட்டும்.

A paradise for shutterbugs

• ஹேம்குந்த சாஹிப்பின் தெய்வீகத்தன்மையில் ஊறவும் –

மலர்கள் பள்ளத்தாக்கின் மலையேறும் வழி ஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவிற்கும் செல்லும் பாதையாகும். ஆண்டில் 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும் இந்த தெய்வீகமான இடத்தைப் பார்க்க வெறும் ஒரு நாள் செலவிடவும். இந்த ஹேம்குந்த் சாஹிப்பை பார்க்காமல் சூழலின் தெய்வீகத்தன்மையை அனுபவிக்காமல் வந்தால் மலர்கள் பள்ளத்தாக்கின் மலையேற்றம் முழுமையடையாது என்று கூறப்படுகிறது. ஜூலை முதல் பள்ளத்தாக்கு அதனுடைய மலர்ச்சி மற்றும் மேன்மையில் இருக்கிறது, எனவே அதை தவற விடவேண்டாம்!

Valley of Flowers - Hemkund Sahib

சுற்றுலா குறிப்புகள்:

சிறந்த காலம் – ஜூலை முதல் செப்டம்பர் வரை
அடித்தள முகாம் : பத்ரிநாத் நெடுஞ்சாலையில் கோவிந்த்ஹாட்
அருகிலுள்ள விமான நிலையம்: ஜாலி கிராண்ட் விமான நிலையம், டெஹ்ராடூன்
அருகிலுள்ள இரயில் நிலையம்: ஹரித்வார் சந்திப்பு இரயில் நிலையம்
அடித்தள முகாமிற்கு செல்லுதல் – தூரம் : 294கிமீ, பாதை: ஹரித்வார் – ரிஷிகேஷ் – தேவ்பிரயாக் – ருத்ரபிரயாக் – கர்ணபிரயாக் – சாமோலி – ஜோஷிமத் – கோவிந்த்ஹாட்
மலர்கள் பள்ளத்தாக்கு – கோவிந்தஹாட்டிலிருந்து தொடங்கி, உங்களுடைய மலையேற்றத்திற்கு முகாமாக இருக்கும், காங்க்கிரியா வழியாக மலர்கள் பள்ளத்தாக்கு வரை 23 கிமீ மலையேற வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here