சிம்லாவிலுள்ள 5 பாரம்பரிய உணவகங்கள்

0
1280

சிம்லா நீண்ட மரங்கள் மற்றும் மால் ரோடு ஷாப்பிங்கிற்தே ஏற்றவை என நீங்கள் கருதினால், அது தவறாகும். பல்வேறு தரமான உணவகங்களையும் சிம்லா கொண்டுள்ளது. எனினும் பலருக்கு அவைகள் குறித்து தெரியாது. உங்களுக்குள் உள்ள உணவு பிரியரை குதூகலப்படுத்த, உள்ளுர் வாசிகளைப்போல் இங்கு அனுபவியுங்கள்.

Mehru Halwai

மேரூ ஹல்வாய் மாவா ஸ்வீட்ஸ்

மால் ரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள மெஹர் சந்த் ரூ புரோஸ் (மேரூ ஹல்வாய் என பிரபலமாக அறியப்படுகிறது) அதன் மாவா இனிப்புகளுக்காக பெயர் பெற்றதாகும். 1902 – ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த இனிப்புக் கடை, மிகப்பழமைவாய்ந்த மற்றும் சுத்தமான நெய் கொண்டு உருவாக்கப்படும் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள் நெருக்கமாக இருப்பினும் நன்கு பராமரிக்கப்படும் சூழல், பாதாம் மற்றும் தேங்காய் பவுடர் கொண்டு வழங்கப்படும் மாவா பர்ஃபி ஆகியவையே ஆகும்.

Baljees Restaurant

பால்ஜீஸில் மதிய உணவு

இந்த பாரம்பரிய உணவகம் 1945 – ம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். ஆடம்பர சுற்றுப்புறத்தில், அழகான உள்ளலங்காரங்களை இது கொண்டுள்ளது. சாமான்கள் முதல், டேபிள் துணி அல்லது மிடுக்காக உடையணிந்த பணியாளர்கள் வரை அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கும் பட்டர் நான்கள் உடன் மஷ்ரூம் டோ பியாஸா வின் சுவையை உங்களால் வேறு எங்கும் பெற முடியாது. மதிய உணவை உண்டு முடித்தபிறகு, இங்கு கிடைக்கும் சூடான குலாப் ஜாமூன்களை சாப்பிட மறக்க வேண்டாம்.

Taka Bench

தக்கா பென்ச் கோல்கப்பாக்கள்

தக்கா பென்ச் உரிமையாளர் பீகாரைச் சேர்ந்த லால் ஷர்மா ஆவார். ஷிம்லாவின் சிறந்த கோல்கப்பாக்களை இவர் விற்பனை செய்கிறார். மாநில நூலகம் மற்றும் பிரபலமான கிறைஸ்ட் சர்ச்சிற்கு பின்புறம் இந்த உணவகம் அமைந்தள்ளது. 1948 – ம் ஆண்டு முதல், உள்ளுர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இவர் இனிப்பு மற்றும் கார சுவைகளில் கோல்கப்பாக்களை விற்பனை செய்து வருகிறார். ஃபுரூட் சேட் வியாபாரியாக துவங்கி அவர், படிப்படியாக இந்த அற்புதமான சுவை கொண்ட கோல்கப்பாக்கள் உற்பத்தியாளராக வளர்ச்சியடைந்துள்ளார்.

Sita Ram & Sons

சீதா ராம் ரூ சன்ஸ் – ல் சோலா பத்தூரா

இனிப்பு மற்றும் கார சுவைகளில் ரூ.40 விலைக்கு இரண்டு பத்தூராக்களை வழங்கும் சீதா ராம் ரூ சன்ஸ் சோலா பத்தூராவிற்காக பெயர் பெற்ற மிகப்பிரபலமான உணவகமாகும். 1953 – ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த உணவகம் மிகவும் சிறியது என்பதால் இங்கு அமர இடம் கிடைப்பது மிகவும் அரிதாகும். எனினும், அருகாமையிலுள்ள பென்சுகளில் அமர்ந்தபடி அவற்றை உண்டு மகிழலாம்.

Aunty's Kitchen

ஆன்டி கிட்சனில் அசல் சைனீஸ்:

மிடில் பஜாரின் குறுகலான சந்தில் ஆன்டீஸ் கிட்சன் அமைந்துள்ளது. இந்த குடும்ப உணவகமானது 41 ஆண்டுகளாக சுவைமிக்க சீன வகை உணவுகளை வழங்கி வருகிறது. தற்போது கிம் எனப்படும் பெண்ணால் இது நடத்தப்பட்டு வருகிறது. சிறிய மற்றும் குறுகலான உணவகமாக இருப்பினும், ஷிம்லாவில் இதற்கு ரசிகர்கள் அதிகமாகும். இங்கு வழங்கப்படும் வெஜ் மோமோஸ் மற்றும் பெரியதொரு கிண்ணத்தில் வழங்கப்படும் சுவை மிகுந்த பூண்டு சூப் போன்றவைகளை நீங்கள் வேறு எங்கும் பெற முடியாது.

ஷிம்லாவில் உங்கள் நாவிற்கு விருந்தளிக்க நீங்கள் தயாரா?

Originally written by Yashpal Sharma. Read here.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here