பிற தாஜ்கள்

0
1002

இந்தியக் கட்டிடக்கலையின் உச்சமாக தாஜ்மஹால் திகழ்கிறது. 21 ஆண்டகள், 20,000 அரேபிய கட்டிடக்கலைஞர்கள், திட்டவல்லுனர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு தாஜ் மஹால் உருவாக்கப்பட்டது. ஒரு தாஜ் மஹாலைக் கொண்டிருப்பதே பல தேசங்களுக்கு பெருமையாகத் திகழும் நிலையில், இந்தியாவில் இன்னும் சில அத்தகையப் பெருமைகளும் உள்ளன!

பிற தாஜ்களைப் பற்றி நாம் இப்போது பார்க்கலாம்:

Humayun’s Tomb

யுமாயுன்ஸ் டாம்ப், டெல்லி: அக்பர் அவர்களால் அவரது தந்தை யுமாயுன் அவர்களின் நினைவாக, தாஜ் மஹால் கட்டப்படுவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பாக இது கட்டப்பட்டது. மத்திய ஆசிய மற்றும் பெர்ஷிய கட்டிடக்கலையின் கலவையான இது உருவானது. சார்பக் அல்லது பெர்ஷிய தோட்டம் கொண்ட இந்தியாவின் முதல் மியூசோலியமாக இது திகழ்கிறது.

Itimad-ud-Dawlah Tomb

டோம் ஆஃப் இடிமாத்-உத்-தவ்லாஹ், ஆக்ரா: “பேபி தாஜ்” என்றும் அழைக்கப்படும் இது, நூர் ஜஹானின் தந்தை மிர்ஸா கியாஸ் பெக் அவர்களது மியூசோலியமாகும். சிகப்பு சேண்ட்ஸ்டோன் மற்றும் வெள்ளை மார்பிள் கொண்ட தாஜ் மஹால் கட்டப்படுவதற்கு பத்து ஆண்டகளுக்கு முன்பு, ஆக்ரா கண்டோன்ணெ;ட் இரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இது கட்டப்பட்டது.

Bibi ka Maqbara

பிபி கா மக்பரா, ஓளரங்காபாத்: இந்த அற்புதமான நினைவுச்சின்னம் தாஜ் மஹால் கட்டி முடிக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கப் பின் ஆசாம் ஷா அவர்களால், அவரது தாய் திலாரஸ் பானு பேகம் அவர்களது நினைவாக கட்டப்பட்டதாகும். இதன் பல்வேறு அம்சங்கள் தாஜ் மஹாலை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. தாஜ் மஹாலின் முதன்மை கட்டிடக நிபுணரின் மகன் அதா-உல்லா அவர்களால் இது வடிவமைக்கப்பட்டது.

Bulandshahr Taj

மினி தாஜ், புலன்ட்சாஹர்: ஓய்வுபெற்ற போஸ்ட்மாஸ்டர் ஃபைசுல் ஹஸன் குவாத்ரி அவர்களால், தனது மனைவியின் நினைவாக இது கட்டப்பட்டதாகும். புலான்ட்சாஹர் – லிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள கசீர் கலன் கிராமத்தில் அமைந்துள்ள இந்த மியூசோலியம் தாஜ் மஹாலிக் சிறிய வடிவமாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here