இ;ந்திய வரலாற்றுத் தொகுப்பில், ஃபிரெஞ்சு கலாச்சார வெளிப்பாடு

0
571

Blog-Post-For_-Former-French-Colonies-in-India

உலகளாவிய அளவிலான பல்வேறு வேறுபட்ட கலாச்சாரங்களின் தொகுப்பாக இந்தியா திகழ்கிறது. ஒரு பெரிய நாடாகவும், பல்வேறு விஷயங்களைக் கொண்டுள்ள நாடாகவும் திகழும் நிலையில், அதன் அழகியல் அம்சங்களும் மற்றும் அற்புதமான கலாச்சார வடிவங்களும் மிகவும் பிரபலமானவை. நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நம்மீது படையெடுத்த தேசங்களையும் எப்போதும் கவர்ந்துள்ளது மற்றும் இதன் காரணமாகவே பிரிட்டிஷ்வாசிகள் நம்மை 350 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்.  ஃபிரெஞ்சு நாட்டினரும் தங்களுக்கான மையத்தை அமைப்பதிலும் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலைபெறுவதிலும் பின்தங்கவில்லை.

சிறிது காலத்திற்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், வங்காளவிரிகுடா கரையில் அமைந்துள்ள பாண்டிச்சேரி மற்றும் ஹ{க்ளி நதிக்கரையில் அமைந்துள்ள சந்த்நகர் ஆகிய இடங்களில் இன்னும் வெளிநாட்டில் இருக்கும் உணர்வினை வழங்கும் வகையில், ஃபிரெஞ்சு காலனிகள் மற்றும் குடியிருப்புகளைக் கொண்டுள்ளன.

இந்நகரங்கள் நீண்ட-கால பாரம்பரியத்தினை எவ்வாறு பராமரிக்கின்றன என்பதை நாம் சற்று விரிவாகப் பார்க்கலாம்:

பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரி: 245 ஆண்டுகளாக ஃபிரெஞ்சு நாட்டினரால் ஆட்சி செய்யப்பட்ட, பாண்டிச்சேரி என்னும் அழகான நகரம், இயக்குனர் ஆங் லீ – ன் “லைஃப் ஆஃப் பை” என்றும் படத்தில் மிக அழகாக படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கும். அழகியல் வாய்;ந்த ஃபிரெஞ்சு காலனிகள், கத்தோலிக் கத்தீட்ரல்கள் மற்றும் கடற்கரைகளில், ஃபிரெஞ்சு கலாச்சாரத்தில் தாக்கம் நிறைந்திருப்பதை காணலாம். சிறிய அளவிலான நகரமாக இருப்பினும், சுதந்திர போராட்ட காலகட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மற்றும் ஃபிரெஞ்சு ஆட்சியாளர்கள் என இரு தரப்பினர் மத்தியிலும்சு தந்திரத்திற்கான இந்நகரம் போராடியது. தற்போது ஒரு யூனியன் பிரதேசமாக, பாண்டியின் பாரம்பரிய கலாச்சாரத்தில், ஸ்ரீ அரபிந்தோ மற்றும் ஃபிரெஞ்சு பெண்மணியான, பிரபலமான “தி மதர்” என்று அழைக்கப்படும் மிலா அல்ஃபாஸ் ஆகியோரின் தாக்கம் முற்றிலுமாக நிறைந்துள்ளது.

சந்த்நகர்: ஃபிரெஞ்சு கலாச்சாரத்தின் வெளிப்பாட்டினைக் கொண்டுள்ள சந்த்நகர், இந்தியாவின் ஒரு பகுதியாக 1955 – ம் ஆண்டு மாறியது. வர்த்தகம் மற்றும் அதிகாரத்திற்காக பல்வேறு வெளிநாட்டின் போர்களை சந்தித்துள்ள இந்த பேரழகு வாய்ந்த நகரம், 1673 – ம் ஆண்டு முதல் ஃபிரெஞ்சு நாட்டால் ஆளப்பட்டுவந்தது. வங்காளத்தின் முக்கிய வர்த்தக மையங்கள் ஒன்றாக விளங்கிய இந்நகரம், தற்போது ஒரு பாரம்பரிய நகரமாக, பழம்பாணியில் அமைந்த தெருக்கள் நிறைந்து, பெங்கால்  தன்மைகளைக் கொண்டு ஃபிரெஞ்சு கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது.

இந்தியா ஒரு மக்கள், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்று கூறுவது நிஜமே. அடுத்த முறை நீங்கள் எந்தவொரு வெளிநாட்டினரால் ஆளப்பட்ட டவுனிற்கு வருகை தந்தாலும், அதன் வரலாற்று அம்சங்களை கட்டாயம் அறிந்துகொள்ளுங்கள். இது வரை நீங்கள் அறியாத விஷயங்களும் உங்களுக்கு தெரியவரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here