இந்தியா ஒரு விரிவாக மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் விமான வலையமைப்பினைக் கொண்டிருப்பினும், பெரிதும் விரும்பப்படும் பயண போக்குவரத்து முறையாக இரயில்களே திகழ்கின்றன. அதிலும் உங்களுக்கு இரயிலில் ஜன்னல் இருக்கை கிடைத்தால், ஏரிகளின் அற்புதமான அழகை கண்டுகளித்தபடி பயணம் செய்யலாம்.
இரயிலிலிருந்து நீங்கள் கண்டுகளிக்க சில ஏரிகளின் பட்டியல் கீழ்காணுமாறு:
வடேபள்ளி ஏரி, வராங்கல், தெலுங்கானா
காஜிப்பேட்டை ஜங்ஷகினலிருந்து வராங்கல் வழித்தடத்தில், இடது புறம் நீங்கள் வN;டபள்ளி ஏரியைக் காணலாம். இந்த ஏரியில சூரிய அஸ்தமனங்கள் மிகவும் அழகு வாய்ந்தவையாகும். மாலை வேளைகளில் நீங்கள் அவற்றை கடக்கையில் சிறப்பான புகைபடங்களை எடுக்க கேமராவை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
வழித்தடம்: செகந்திராபாத் – விசாகபட்டிணம்
சிறந்த நேரம்: மாலை
டிக்கெட் கட்டணம்: ரூ.60
சில்லிகா ஏரி, கஞ்சம், ஒடிஷா
சென்னையிலிருந்து ஹவுரா நோக்கி நீங்கள் பயணம் செய்கையில், அற்புதமான சிலிகா ஏரியை கண்டுகளிக்கலாம். கள்ளிக்கோட்டை என்னும் சிறிய நிலையத்தை இரயில் கடந்து, கலிஜை நோக்கி பயணிக்கைளில், சிலிகா ஏரியின் அற்புதமான தோற்றம் காணக்கிடைக்கும்.
வழித்தடம்: சென்னை – ஹவுரா
சிறந்த நேரம்: முன்மாலை பொழுது
டிக்கெட் கட்டணம்: ரூ.60
பாக் ஜலசந்தி, பாம்பன் தீவு, தமிழ்நாடு
பாம்பன் தீவுகளிலுள்ள ராமேஸ்வரம் மற்றும் இந்தியாவை இணைக்கும் பாம்பன் பாலம் 2 கிமீ தூரம் கொண்டதாகும். பாதுகாப்பு காரணங்களால் இந்த இரயில் மிகவும் மெதுவாகவே பயணிப்பது, பயணிகளுக்கு கடல் பயணத்தை அனுபவிக்க சிறந்த வாய்ப்பினை வழங்குகிறது.
வழித்தடம்: ராமேஸ்வரம்
சிறந்த நேரம்: சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள்
டிக்கெட் கட்டணம்: ரூ.150
தத்சாகர் நீழ்வீழ்ந்நி, மட்கான், கோவா
பெல்காம் மற்றுமு; மட்கான் இடையில் பயணிக்கையில், கேட்டை போன்ற கேஸில் ராக் நிலையத்தில் இரயில் நுழையும். இங்கு மனம் மயக்கும் தத்சாகர் நீழ்வீழ்ச்சியை நீங்கள் வலதுபுறம் காணலாம். தங்கள் பயணம் மழைக்காலத்தில் (ஜுன்-ஜுலை) அமைந்தால் இது இன்னும் சிறப்பாக இருக்கும்.
வழித்தடம்: பெல்காம் – மட்கான்
சிறந்த நேரம்: சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள்
டிக்கெட் கட்டணம்: ரூ.150
கங்கை, வாரணாசி, உத்தரப்பிரதேசம்
முகல் சாரையிலிருந்து வாரணாசி நோக்கி நீங்கள் பயணம் செய்கையில், டஃப்ரின் பாலத்தை (மால்வியா பாலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கடப்பீர்கள். இந்த 2 கிமீ நீள பாதையை இரயில் கடக்கையில், வாரணாசி நகரம் மற்றும் அதன் புனித நதியின் சிறந்த தோற்றத்தை உங்களால் காண முடியும்.
வழித்தடம்: புதுடெல்லி – பாட்னா
சிறந்த நேரம்: காலை
டிக்கெட் கட்டணம்: ரூ.150