கரிபாடியா: ஜகன்னாதரின் 20-ம் நூற்றாண்டு பிறப்பிடம்

0
1053

ஒடிசாவின் மறைவான புதையாக கரிபாடியா கிராமம் திகழ்கிறது. சமீபத்தில் ஜகன்னாதர் சிலையை வடித்த “தரு” இங்கு கிடைத்ததையடுத்து இது ஒரு பிரபலமான சுற்றுலா அமைவிடமாக மாறியுள்ளது. “தரு” அல்லது வேப்பிலை மரமானது ஸ்ரீ ஜகன்னாதரின் உருவத்தை வடிக்கப்பயன்படுத்தப்பட்ட சாதாரண வேப்ப மரம் அல்ல. இது புனிதத்தன்மை வாய்ந்ததாகவும் மற்றும் ஆன்மீக அறிகுறிகளை கொண்டதாகவும் கருதப்படுகிறது. இந்த “தரு” கடந்த ஆண்டு, ஒடிசா முழுவதிலுமிருந்தும் நடத்தப்பட்ட நபகலேபரா என்னும் “புதிய உடல்” என்னும் அர்த்தம் கொண்ட திருவிழாவில் 10 மரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.

Daru symbols

அதிக நெரிசல் கொண்ட நகர வாழ்விலிருந்து தள்ளியிருக்கும் இந்த கிராமம், யாத்ரீகர்களுக்கு ஒரு புனிதமான இடமாக மாறியுள்ளது. பைக்கா நதிக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த மரத்திற்கு அருகில் மேலும் ஒரு ஜகன்னாதர் கோவில் உள்ளது. இதே மாவட்டத்தின் பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய இடங்களில் மேலும் இரண்டு தருக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Gorekhnath Temple - Kharipadia

கரிபடியாவிலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோரேகாந்த் ஆலையம் மற்றும் மா சரளா ஆலையம் ஆகியவைகளையும் நீங்கள் கண்டுகளிக்கலாம். ஒரு பழைய ஆலமரத்திற்கு கீழாக சிவன் அமர்ந்திருக்கும் நிலையில் கோரேகாந்த் ஆலையம் உள்ளது.

Sarala temple - Kharipadia

கோரேகாந்திலிருந்து வெறும் 6 கிமீ தொலைவில் சரளா ஆலையம் அமைந்துள்ளது. இதன் வழியில் அமைந்துள்ள அழகான சாலைகள் மற்றும் சுற்றுப்புறங்கள் இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது. “பக் தேவி” (அறிவு மற்றும் ஞானத்திற்கான கடவுள்) பெண் கடவுளின் ஆலயமாக அமைந்துள்ள இதில், மிகவும் பழமைவாய்ந்த மற்றும் பிரபலமான வேப்பமரம், கோவிலின் முன்பாக அமைந்துள்ளது மற்றும் இது கடந்த ஆண்டு, கடவுள் “பாலபத்ராவின் மரமாக” தேர்ந்தெடுக்கப்பட்டது.

அடைவது எப்படி: கட்டாக் மற்றும் புபநேஸ்வரிலிருந்து சாலை மார்க்கமாக கரிபாடியா சிறப்பான இணைப்பினைக் கொண்டுள்ளது. அருகாமையிலுள்ள இரயில் நிலையம் ரகுநாத்பூர் இரயில் நிலையமாகும்.

முன்பு அறியப்படாத இக்கிராமம் தற்போது, ஜகன்னாத பக்தர்களின் பிரபலமான அமைவிடமாகத் திகழ்கிறது. வர்த்தகமயமாக்கல் அதிகரிப்பதற்கு முன்பாக ஒரு முறை இங்கு சென்று வந்துவிடவும்!

 

Originally written by Lopamudra Sahoo. Read here.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here