ஒரு எளிய முயற்சி எவ்வாறு ஒரு அழகான “தொங்கும் தோட்டமாக மாறியது”?

0
441

கோவில்கள், அபரிமிதமான கலாச்சாரம், திருவிழாக்கள் மற்றும் பெரிய அளவிலான ஆற்றங்கரைகள் ஆகியவைகளுக்காக பெயர் பெற்ற, கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளதொரு சிறிய டவுன் அலுவா ஆகும். இந்நகரத்தின் மணிமுடியில் மற்றுமொரு வைரக்கல்லாக, அலுவா இரயில் நிலையம், மிகச்சிறந்த அழகுடன் வழக்கமான இ;நதிய இரயில்வே நிலையங்களில் தன்மைகளையே முற்றிலுமான மாற்றும் வகையில் அமைந்துள்ளது.

நுழைவாயிலில் உடைந்த மர வேர் தடுத்துக்கொண்டிருத்தல் மற்றும் சமநிலையற்ற நிலைய வளாகங்கள் என இதற்கு முன்பாக இந்த ஸ்டேஷன் வழக்கமான இரயில் நிலையம் போன்றே இருந்தது. இந்த நிலையத்தை மாற்றும் எண்ணம் சுகாதார ஆய்வாளர் திரு.அருண் அவர்களுக்கு உதயமானது மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் ஊ.பாலகிருஷ்ணன், திரு.மோஹன் மற்றும் செல்வி.இந்துஆகியோர் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். நிலைய பணியாளர்களால் டிராக்கிலிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டள மற்றும் சைனா ரோஜாக்கள் (குறைவான பராமரிப்பு தேவைப்படும் செடி வகை) அவற்றில் நடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்களில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற வண்ணப்பூச்சுகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொங்கும் தோட்டத்தை உருவாக்கியது. இது மட்டுமின்றி, அனைத்து குப்பைகள் மற்றும் கிளைகளையும் சுத்தம் செய்து, நிலத்தை சமநிலை செய்து, நுழைவாயிலிலேயே ஒரு அழகான தோட்டம் அமைக்கப்பட்டது.

இம்முன்முயற்சி இரயில் நிலையத்தை அழகுபடுத்தியதோடு மட்டுமின்றி, அதன் பயன்பாட்டு செயல்முறைகளையும் மேம்படுத்தியுள்ளது. பாதசாரிகள் டிராக்கை கடப்பதன் வழியாக விபத்தில் சிக்குவதில் இது பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இச்செடிகள் மற்றும் பாட்டில்கள் தொங்கவிடப்படுவது நிலையத்திற்கு அழகை சேர்த்ததோடு மட்டுமின்றி, மக்கள் அதன் வழியாக கடந்து செல்லாத வகையில் தடையாகவும் அமைந்தது மற்றும் இதனால் ஒரு பிளாட்ஃபார்மிலிருந்து மற்றொரு பிளாட்ஃபார்மிற்குச் செல்ல மக்கள் மேல்நிலை நடைபாதைகளை யன்படுத்தத்துவங்கினர்.

இதன் வழியாக, இத்திட்டம் அழகியல் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி, தர்க்க ரீதியிலான மற்றும் நடைமுறை பயன்பாட்டிற்கும் உதவியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு நட்பார்ந்த சுத்த நிலைக்கான உதாரணமாக மட்டுமின்றி, குறைவான செலவீனத்துடன், இந்தியாவின் பிற அழுக்கான இரயில் நிலையங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இது அமைந்துள்ளது. “சுத்தமான இந்தியா” தேசிய முன்முயற்சிக்கு மிகப்பெரிய உத்வேகமாகவும் அமைந்துள்ளது – இரண்டு பலன்கள், ஒரே எளிமையான தீர்வு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here