அலகாபாத்தில் கும்ப மேளா பற்றி நீங்கள் ஒரு போதும் அறியாத 8 உண்மைகள்

0
1981
Ardha-Kumbh Blog in Tamil

ஜனவரி 2019 வந்தவுடன், உத்தரப் பிரதேசத்தில் அனைத்து சாலைகளும் பிரயாக்ராஜ்க்கு (அலகாபாத்) வழிவகுக்கும். இந்தப் புனிதமான நகரத்தில் ஜனவரி 15 மார்ச் 4, 2019 வரை திரிவேணி சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய கும்ப மேளாவின் திருவிழா காலமாக இருக்கும். வளரும் போது நாம் ஒவ்வொருவரும் கும்ப கா மேளாவிலுள்ள கூட்டம் பற்றி கதைகள் கேட்டிருக்கிறோம். கூட்டம் அவ்வளவு அதிகமாக இருக்கும் நீங்கள் மிகவும் எளிதாக வழி தவறிவிடுவீர்கள். மேலும் இந்த ஆண்டு, அலகாபாத்தில் அர்த கும்ப மேளா (இது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்) நடக்கப் போகிறது. எனவே, மில்லியன் கணக்கான இந்து பக்தர்கள் இந்தச் சிறப்பு விழாவில் கலந்து கொள்ள பயணிப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். உலகின் மிகப் பெரிய மத யாத்ரீகளின் வழிபாட்டுக்குரிய கூட்டம் என்ற பதிவு கும்ப மேளாவுக்கு உள்ளது. மேலும் வரவிருக்கும் இந்த கும்ப மேளா இந்தப் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நீங்கள் மில்லியன் கண்காகன பக்தர்கள் ஒன்று கூடுவது தான் கும்ப மேளா பற்றிய தனித்துவமான விஷயம் என்று நீங்கள் நினைத்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள் குறித்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனவே, படித்துப் பாருங்கள்.

Book Train Ticket

#1: புராணங்கள்

Kumbh Mythology in Tamil

வார்த்தை கும்ப என்றால் அமிர்தத்தின் பாத்திரம் (தேவாமிர்தம்) என்று அர்த்தம். சமுத்ர மந்தனத்தில், அமிர்த்தம் இருக்கும் ஒரு பாத்திரம் தேவர்களாலும் அசுரர்களாலும் கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் அதைச் சொந்தம் கொண்டாடினார்கள். இறைவன் பிரம்மாவின் கட்டளையில் தேவர்களில் ஒருவர் அமிர்தத்துடன் ஓட முயன்றார். எனினும் அசுரர்கள் தூரத்தி பாத்திரத்தைப் பறிக்க முயற்சித்தார்கள். சண்டையில் வாழ்விற்கான அமிர்தம் 4 இடங்களில் சிந்தியது: அலாகாபாத், இந்தூர், நாசிக் மற்றும் ஹரித்வார். இந்த நான்கும் இன்று கும்ப மேளா புனித இடங்களாக மாறிவிட்டன.

கதையில், முனிவர் துர்வாசர் கோபத்தில் தேவர்களை சபித்தார். இது தேவர்கள் மற்றும் அசுரர்களின் வலிமையைப் பலவீனப்படுத்தியதால் (அசுரர்கள்) பழிவாங்க பூமியில் பேரழிவை தொடங்கினார்கள். எனவே, இறைவன் பிரம்மா தேவாமிர்தத்தை கடைந்து எடுக்கும் படி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அறிவுறுத்தினார். எனவே, அவர்கள் நடைமுறையின் பாதியில், தேவர்கள் அவர்களுக்காக அமிர்தத்தை வைத்துக்கொள்வார்கள் என்று அசுரர்கள் புரிந்து கொண்டார்கள். எனவே, அவர்கள் தேவர்களை 12 நாட்களுக்கு தூரத்தினார்கள் மேலும் இந்தச் சமயத்தில் நான்கு இடங்களில் அமிர்தம் சிந்தியது. அமுதம் நதிகளை அமிர்தமாக மாற்றியது என்று கூறப்படுகிறது. பிரயாக்ராஜில் புனிதமான நதிகள் கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதியின் சங்கமம் இது போன்ற ஒரு இடமாக இருக்க வேண்டும்.

Book RailYatri Hotels 

#2: முதல் வரலாற்று குறிப்பு

Kumbh-Mela-History

அரசர் ஹர்ஷவர்த்தன் அவர்களின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த, பிரபலமான சீன பயணர், ஹூயன் சாங் அவர்களின் விவரங்களில் கும்ப மேளாவின் முதல் வரலாற்று பதிவுகளைக் காணலாம். அவருடைய படைப்புகளில், பிரயாகிலுள்ள இரண்டு நதிகளின் சங்கமத்தில் நூற்றுகணக்கான பக்தர்கள் நீரில் மூழ்கும் சமயச்சடங்கு பேரரசர் ஹர்ஷவர்த்தன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிடுகிறார்.

Book Train Ticket

#3: நீங்கள் கும்ப மேளாவில் @ எப்போது இருக்க வேண்டும்

ArdhKumb- 2019

புனிதமான நதிகளின் தண்ணீர் தேவாமிர்தமாக மாறும் குறிப்பிட்ட நாட்களில் கும்ப மேளா நடைபெறுகிறது. எனவே, கும்ப மேளாவின் (அர்த அல்லது மகா கும்ப மேளா) தேதிகளை முடிவு செய்வதற்கு முன் சூரியன், சந்திரன் மற்றும் குருவின் நிலைகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பொதுவாக, கிரகங்கள் சரியான நிலையில் இருக்கும் போது, கும்ப மேளா அலகாபாத்தில் மாக் மாதத்தில் நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் நதிகளில் புனித நீராடி பக்தர்கள் அவர்களின் பாவங்களைக் கழிக்கிறார்கள். இந்த ஆண்டின் மிகவும் மங்களகரமான நாட்கள் 14, 27 ஜனவரி, 6,15, 17, 21, 25 பிப்ரவரி.

Food on Train 

#4: வலி மீது நம்பிக்கை

Railyatri Hotel service

வழக்கமாக நதிகள் உறையும் போது குளிர்கால மாதங்களில் நடைபெறுகிறது, குறிப்பாக இந்தியாவின் வடக்கு பகுதிகளில், அதிகாலையில் நதியில் நீரில் மூழ்குவதற்கு கொஞ்சம் மனோதிடம் வேண்டும். மேலும் மில்லியன் கணக்கான பக்தர்கள் பக்தியுள்ள நம்பிக்கைக்காக மகிழ்ச்சியுடன் இந்த வலியைத் தாங்கிக் கொள்கிறார்கள். முதல் ஷஹி ஸ்னான் மகர சங்கராந்தி அன்று நடைபெறுகிறது மேலும் கடைசியாக மார்ச் 4, 2019 அன்று (அடுத்த மாதம் பெளர்னமி) நடைபெறுகிறது. இடையிலுள்ள நாட்கள் பெளர்னமியாக, அமாவாசையாக மற்றும் பசந்த பஞ்சமியாக இருக்கும்.

Book Outstation Cabs

#5: நாகா சாதுக்கள் இறங்கும் நேரம்

வாழ்க்கையின் அனைத்து பொருட்களையும், இன்பங்களையும் ஆடம்பரங்களையும் துறந்த நாகா சாதுக்களைப் பார்க்க கும்ப மேளா உங்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கிறது. அவர்கள் கடவுள் சிவபெருமானின் தீவிரமான பக்தர்கள் மேலும் கும்ப தவிர அவர்களை வேறு எங்கும் பொதுவில் காண முடியாது. இந்த விழாவின் போது அவர்கள் அலகாபாத்திற்கும் மற்ற கும்ப மேளா இடங்களுக்கும் பெருமளவில் கூட்டமாக வருகிறார்கள். சாதுக்கள் ஆயுதங்களுடன் (குச்சிகள் மற்றும் வாள் போன்றவை) அவர்களின் போர்வீரர் திறன்களை வெளிப்படுத்துவதை காணலாம். தங்களைத் தானே வேதனையில் ஆழ்த்திக்கொள்வது தான் அவர்களின் சிறந்த பொழுதுபோக்கு. நீங்கள் விரும்பினால் அவர்களின் கண்ணோட்டங்கள், கருத்துக்கள் மற்றும் தத்துவங்களைக் கேட்கலாம் மேலும் அவர்கள் இது குறித்து மகிழ்ச்சியுடன் விவாதிப்பார்கள். நாகா சாதுக்களைத் தவிர, மற்ற இந்து பிரிவிலிருந்து புனிதமானவர்களும் இந்த விழாவிற்கு வருகிறார்கள். அத்தகைய பிரிவுகள் சிலவற்றில் கல்பவாசிகள் (ஒரு நாளைக்கு மூன்று முறை குளிப்பவர்கள்) மற்றும் உர்தவாவஹூர்கள் (கடுமையான துறவறம் மேற்கொள்வதில் நம்பிக்கையுள்ளவர்கள்) அடங்கும்.

RailYatri Bus Booking

#6: பெருமளவிலான கூட்டம்

ஒவ்வொரு முறையும் கும்ப மேளா கடந்த பதிவுகளை உடைத்தெரியும் வகையில் நடைபெறுகிறது. மேற்கூறப்பட்டபடி, இந்த விழாவில் தான் பூமியில் பெருமளவிலான மனிதர்கள் அமைதியாக ஒன்றுகூடுகிறார்கள். அலகாபாத்தில் 2013-ல் நடைபெற்ற கும்ப மேளாவில் பக்தர்கள் மிகப் பெருமளவில் வந்துள்ளார்கள். கும்ப மேளா 2013-ல் 120 மில்லியன் மக்கள் வந்தார்கள்! அலகாபாத் இந்த ஆண்டு அதனுடைய சாதனையை மேம்படுத்துமா? காலம் தான் பதில் சொல்லும்.

#7: தனிப்பட்ட ஹனுமான் கோவிலை பார்ப்பதற்கான வாய்ப்பு

அலகாபாத்தில் கும்ப மேளாவின் முக்கியமான ஈர்ப்புகளில் ஒன்று என்னவென்றால் ஹனுமான கோவிலை பார்ப்பதற்கான வாய்ப்பு. இது ஆண்டின் பெரும்பாலான காலங்களில் கங்கை நீரில் முழ்கி இருக்கும், தனிப்பட்ட கோவிலாகும். இந்து புராணங்களின் படி, கடவுள் ஹனுமானின் பாதங்களைத் தொடுவதற்கு நதி கங்கை அதனுடைய நீர் அளவை அதிகரிப்பதால் கோவில் மூழ்கியுள்ளது என்று நம்பப்படுகிறது. ஆனால் கும்ப மேளாவின் போது கோவில் நீரிலிருந்து வெளிப்படுகிறது. இந்த தனிப்பட்ட கோவிலின் உள்ளே சாய்ந்த நிலையில் அமர்ந்திருக்கும் கடவுள் ஹனுமானின் மிகப் பெரிய சிலையை (இது 20 அடி உயரம்) காணலாம்.

#8: ஒரு பெரிய பண விவகாரம்

வேலைவாய்ப்பு இன்னும் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும் ஒரு தேசத்தில், கும்ப மேளா பலருக்கு தற்காலிகமான சம்பாதியத்தைக் கொடுக்கிறது. கும்ப மேளா 2013-இன் மதிப்பீடுகள் சுமார் 650,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன மேலும் நிகழ்ச்சியின் போது மொத்தம் ரூபாய்.12,000 கோடி சம்பாதிக்கப்பட்டது என்று பரிந்துரைக்கிறது. இது பலருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

இந்த தனிப்பட்ட மத நிகழ்ச்சிக்குச் செல்ல நீங்கள் திட்டமிடுகிறீர்களா? நல்லது, இரயில் யாத்திரியில் தொந்தரவுகள் இல்லாமல் உங்கள் பயணத்தை திட்டமிட உதவுவதற்கு அனைத்து சேவைகளும் உள்ளது. எங்கள் சேவைகளைப் பார்வையிடவும்.

Book Train Ticket

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here