கிரேட் ஹிமாலயன் கம்ரூ கோட்டை: 15ம் நூற்றாண்டின் அத்தாட்சி

0
1328

வடஇந்தியா, இயற்கை அழகு நிறைந்த இடமாகும் மற்றும் கின்னாவூரிலுள்ள சங்கா வேலி அதிக குறிப்பிடத்தக்கதாகும். மிக அழகிய நிலப்பரப்புகள் அடங்கிய இப்பகுதியின் சிறந்த காட்சித்தோற்றும் கம்ரூ கோட்டையிலிருந்து மிகச்சிறப்பாக காட்சியளிக்கிறது. பத்ரிநாத் கடவுளின் பழம்பெருமை வாய்ந்த கோவிலான இது, இப்பள்ளத்தாக்கினை துஷ்டசக்திகளிலிருந்து காப்பதாக நம்பப்படுகிறது.

கம்ரூவிற்கு வருகை புரிவதற்கான சிறந்த நேரம்

Kamru Fort exterior

சங்கா பள்ளத்தாக்கு முழுமையாக பூத்துக் குலுங்கும் காலகட்டம் ஏப்ரல் முதல் மே வரையிலும் மற்றும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் ஆகும். உள்ளுர் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், கோட்டைக்குள் நுழைவதற்கு முன்பாக அங்கு வழங்கப்படும் தொப்பி மற்றும் பெல்ட்டை நீங்கள் கட்டாணம் அணிய வேண்டும். எத்தகைய கூடுதல் கட்டணமும் இன்றி இங்கு கேமராக்கள் அனுமதிக்கப்படுகின்றன.

சங்காபள்ளத்தாக்கின் பிற சிறப்பம்சங்கள்

Sangla Kanda

சங்க்ல கண்டா

சங்க்லா புல்வெளி என்றும் அழைக்கப்படும் இப்பகுதியை, நடுத்தர சிரம அளவுகளுடன் ஒரு நாள் டிரெக்கிங் வழியாக கிளேசியர்கள் மற்றும் கினர் ஹைலாஷ் சிகரம் கடந்து அடைவது, இந்த இடத்தை சாகச ஆர்வலர்களுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.

Baspa River

பாஸ்பா நதி

மலைகள் மற்றும் புல்வெளிகளின் 360 டிகிரி கோணத்தை பாஸ்பா நதி வழங்கும். இங்கு மீன்பிடிப்பு, ஆற்றோரத்தில் பொழுதை கழித்தல், தியானம் செய்வதன் வழியாக உடலையும் மற்றும் உள்ளத்தையும் சுத்தமாக்குதல் போன்றவைகளை மேற்கொள்ளலாம்.

Rakcham

ரக்சம்

சங்லாவிலிருந்து 13 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இ;ந்த கிராமம், இப்பள்ளத்தாக்கிற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். சாலையின் சிறந்த இணைப்பினைக் கொண்டிருந்தாலும், 1-2 மணி நேரங்கள் நடத்து இந்த கிராமத்தின் அழகை கண்டு களிப்பது சிறந்த அம்சமாகும்.

Chitkul

சித்குல்

திபெத்திய எல்லையையொட்டி அமைந்துள்ள இந்தியாவின் இறுதி கிராமமாக சித்குல் திகழ்கிறது. சங்க்லாவிலிருந்து 23 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்திலிருந்து 5 நிமிட நடையில் சித்குள் நதியை அடையலாம்.

புத்த மடாலயம்

உங்களுக்கு நேரம் மிகவும் குறைவாக இருந்து, மேற்கூறிய இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்;டால், ரெகாங்க் பியோவிற்கு அருகே அமைந்துள்ள பிரெலெங்கி கொம்பா என்னும் இந்த புத்த மடாலயத்தை நீங்கள் பார்வையிடலாம்.

சங்கா பள்ளத்தாக்கை அடைவது எப்படி?

அருகாமையிலுள்ள இரயில் நிலையம் சிம்லா இரயில் நிலையமாகும். சங்க்லா பள்ளத்தாக்கிலிருந்த 230 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பேருந்துகள் மற்றும் டாக்ஸிகள், ஷிம்லா இரயில் நிலையத்திலிருந்து அடிக்கடி சங்க்லா பள்ளத்தாக்கிற்கு உள்ளது.

 

Originally written by Yashpal Sharma. Read here.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here