பசுமை நிறைந்த சூழலில் இயற்கையின் அற்புதம் – பயணத்தில் கிடைக்கும் வாழ்நாள் அனுபவம்

0
1315

natures-bliss-amidst-the-greens-a-lifetime-experience-on-wheels

தனித்துவமிக்க இரயிலின் தாளம் உங்களையும் பரவசப்படுத்துகிறதா? ஓய்வு நிலை, சாகசம், குடும்பம் மற்றும் மிக முக்கியமாக சேருமிடம் என இரயிலில் பயணம் செய்வது ஒரு அற்புதமான அனுபவமாகும்.

இரயில்களின் வழியாக கிடைக்கப்பெறும் இயற்கை அனுபவம் குறித்து நாம் நினைத்துப் பார்த்தால், உடனடியாக நமது மனக்கண் முன் விரிவது, அழகியல் மிகுந்த “பசுமை பாதை” வழி செல்லும் மேற்கு மலைத்தொடர் பயணங்களே. எனினும், அதுபோன்ற பல்வேறு பிற இயற்கை எழில் கொஞ்சும் பாதைகளும் உள்ளன. அவற்றி;ல் குறிப்பிடத்தக்கது, யெஸ்வந்த்பூர் அல்லது பெங்களுரூ முதல் மங்களுரூ வரை பயணிக்கும் பாதையாகும். சிறிய அளவிலான பயணமாகவே இருப்பினும் ஒவ்வொரு தனிநபரின் நினைவிலும் நீங்கா இடத்தை பிடிக்கச்செய்வதாக இது திகழ்கிறது.

  • மாண்டியாவில் துவங்கும் அற்புதம்: யெஸ்வந்த்பூர் அல்லது பெங்களுரூ இரயில் நிலையத்திலிருந்து துவங்கும் இப்பயணத்தில் முதல் அற்புதத் தோற்றம், சர்க்கரை நகரம் என்று அழைக்கப்படும் மாண்ட்யாவில் துவங்கி, முடிவற்ற வயற்பரப்புகள் மற்றும் பிரபலமான யோக நரசிம்மர் ஆலையம் என நம் கண்களுக்கு முன்னால் விரியும்.
  • மைசூரின் பேரழகு சக்கரங்களில்: கர்நாடகாவின் கலாச்சார தலைநகரமாக மைசூரை இரயில் அடுத்து அடையும். இதன் பேரழகு தன்மைகள் மற்றும் கலாச்சாரம் தொனிக்கும் காட்சிகள் கண்களுக்கு சிறந்த விருந்தாகத் திகழும்.
  • அமைதியான ஹோலெநரஸிபுரா: கே.ஆர்.நகரை அடுத்து இந்த நிலையம் வரும். ஹோமாவதி அணைக்கட்டினை கடந்து செல்லும் இப்பாதை இடம்பெயரும் பறவைகள், பசுமை நிறைந்த சூழல் மற்றும் நதியின் தோற்றம் என நெஞ்சை விட்டு அகலாது திகழும்.
  • காதல் ததும்பும் சக்லேஸ்பூர்: இந்த அழகியல் அமைவிடம், மேற்கு மலைத்தொடரின் மால்நாட் பகுதியில் அமைந்துள்ளது. பெரிய அளவிலான காஃபி எஸ்டேட்டுகள் மற்றும் பசுமை நிறைந்த சூழல் உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். 57 குகைகள் மற்றும் பனி நிரம்பிய மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட இப்பகுதி, பயணத்தின் சிறந்ததொரு பகுதியாகும்.
  • அற்புதமான மேற்கு மலைத்தொடர்: ஆழமான பள்ளத்தாக்குகள், பசுமைதன்மை, மண்ணின் பழுப்பு நிரம், அலைஅலையாய் அமைந்துள்ள மலைகள், மிதக்கும் மேகங்கள் மற்றும் தழுவும் காற்று! ஆகா! இரயில் வழியே கிடைக்கப்பெறும் சிறந்ததொரு அனுபவமாக இது திகழ்கிறது.
  • பசுமை பாதை: மங்களுரூ இரயில் நிலையத்தை அடைவதற்கு முன்பாக இந்த இரயில், பன்ட்வால் மற்றும் புத்தூர் ஆகிய பசுமை நிரம்பிய கிராமங்களை கடந்து செல்லும். இதன் ஒரு காட்சியைக் கூட உங்களால் கேமராவில் படம்பிடிக்காமல் இருக்க முடியாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

குறிப்பு: இப்பயணத்தில் சிறந்த அனுபவத்தைப் பெற, பெங்களுரூ நகரம் – கர்வார் எக்ஸ்பிரஸ் அல்லது யெஸ்வந்த்பூர்-கர்வார் எக்ஸ்பிரஸை தேர்ந்தெடுக்கவும்.

உண்மையைக் கூற வேண்டுமெனில், இயற்கை அழகை மிஞ்சிய அழகு வேறேதும் இல்லை மற்றும் இரயில் பயணத்தில் சாகச உணர்வுடன் இணைகையில், இதற்கு இணை வேறேதும் இல்லை. எனவே, தவறவிடாதீர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here