கோயம்புத்துரின் 6 பாரம்பரிய உணவகங்கள்

0
1652

தமிழ்நாட்டின் நிர்வாக மற்றும் ஜவுளிகள் மையமாக அறியப்படும் யோம்புத்தூரின் உணவு வகைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம் அளிக்காதவையாகும். கோயம்புத்தூர் உணவு முறைகளில் சங்கிலித்தொடர் உணவகங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், பல்வேறு பாரம்பரிய உணவகங்களும் முத்திரை பதித்து வருகின்றன.

Geetha Cafe

கீதா கஃபே: இந்த 80 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட உணவகம் கோயம்புத்தூர் இரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. காலை உணவிற்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இட்லி, வடை, பெங்கல், சாதா, ரோஸ்ட் மற்றும் மசாலா தோசைகள் இந்த உணவகத்தில் நியாயமான விலைகளில் கிடைக்கின்றன. கீதா உணவகத்தில் சமைக்கப்படும் உணவுகளில் சோடா, பாமாயில், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படுவதில்லை.

Adyar Ananda Bhavan

அடையார் ஆனந்த பவன்: இந்த இனிப்புக் கடை அதன் ரசமலாய்க்காக பெயர் பெற்றதாகும். இங்கு கிடைக்கும் சிற்றுண்டிகள் நாவில் நீரூரச்செய்வதாகும். இக்கடை ஒவ்வொரு ஆண்டும் 12 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இனிப்புகளை விற்பனை செய்கிறது.

CS Meals Hotel

சிஎஸ் மீல்ஸ் ஹோட்டல்: 1939 – ம் ஆண்டு முதல் பாரம்பரிய தென்னிந்திய உணவு வகைகளை வழங்கிவரும் பிராமண உணவகமாகும். இந்த உணவகத்தின் துரித உணவுகள் மிகவும் பிரபலமானவை. இந்த உணவகம், காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

Kovai Biryani

கோவை பிரியாணி ஹோட்டல்: 1985 – ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஹோட்டல், காந்திபுரம், ராம்நகரின், கிகாணி பள்ளிக்கு அருகில், பாலத்திற்கு கீழே அமைந்துள்ளது. சிக்கன் மற்றும் மட்டன் தம் பிரியாணிக்காக இந்த ஹோட்டல் புகழ் பெற்றதாகும். இவர்களது பிற சிறப்பு உணவு வகைகளில் குறிப்பிடத்தக்கவை கொங்கு, ஹைதராபாதி, செட்டினாடு மற்றும் திண்டுக்கல் பிரியாணிகள் ஆகும். லிவர் ஃபிரை மற்றும் நாட்டுக்கோழி ஃபிரை போன்ற உணவு வகைகளும் இங்கு பிரபலமாகும்.

Sree Annapoorna Sree Gowrishankar Hotels

ஸ்ரீ அண்ணபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல்: 48 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த தென்னிந்தய உணவுகள் சங்கிலித்தொடர் உணவகம், கோயம்புத்தூர் முழுவதும் 16 இடங்களில் அமைந்துள்ளன. இங்கு கிடைக்கும் இட்லி, சாம்பார் வடை மற்றும் மசாலா தோசை மிகவும் சுவையாளதாகும். இந்த உணவகத்தின் முக்கிய உணவு வகை டிராகன் பன்னீர் எனப்படும் மொறுமொறுப்பான பண்ணீர் மற்றும் நாவூறச்செய்யும் கிரேவி கொண்ட துரித உணவாகும்.

Andhra Ruchulu

ஆந்திரா ருச்சுலு: கோயம்புத்தூரின் கணபதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த உணவகம், அசல் ஆந்திர மீல்ஸ் மட்டுமின்றி, கோங்குரா சிக்கன், நாட்டுக்கோழி வருவல், மீன் பொலிச்சது, மட்டன் வெபுண்டு, ஃபிங்கர் ஃபிஷ் மற்றும் இறால் உணவு வகைகளுக்கு பெயர் பெற்றதாகும். ரூ.600 செலவில் இரு நபர்கள் இங்கு வயிரார உண்ணலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here