மூணாறின் 8 கட்டாயம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகள்

0
2382

5200 அடிகள் அல்லது கடலும் மேலம் 1600 மீட்டர் உயரத்தில் மேற்குமலைதொடர்ச்சியில் அமைந்துள்ளதொரு சிறிய மலைவாசஸ்தலம் மூணாறு ஆகும். அற்புதமான நீழ்வீழ்ச்சிகள் கொண்டுள்ள மூணாறு சிறந்த மதிப்பு கொண்டதாகும் மூணாறில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 8 நீழ்வீழ்ச்சிகளின் பட்;டியல் கீழ்காணுமாறு.

Attukal Waterfalls

ஆட்டுக்கல் நீழ்வீழ்ச்சி: மூணாறிலிருந்து பள்ளிவாசல் செல்லும் வழித்தடத்தில் 9 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. சுற்றுப்புற மலைகளின் பசுமை தோற்றம் மற்றும் மலையுச்சியிலிருந்து விழும் நீர் உங்க்ள மனதில் நீங்கா இடத்தை நிச்சயம் பிடிக்கும். நீர்வீழ்ச்சி பகுதிகளைச் சுற்றி டிரெக்கிங் செய்வது சுற்றுலாப்பயணிகள் முயற்சிக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயமாகும்.

Lakkam Waterfalls

லக்கம் நீழ்வீழ்ச்சி: மூணாறிலிந்து மறையூர் வழித்தடத்தில் (மூணாறிலிருந்து 5 நிமிடங்கள் தொலைவில்) அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி “வாகை” மரங்களை சுற்றிலும் கொண்டுள்ள அழகான சிகப்பு வண்ண மலர்கள் நிறைந்த காட்சியை உண்டாக்குகிறது. எரவிக்குளம் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் இந்த நீழ்வீழ்ச்சி பல்வேறு கடினமாக பாதைகளைக் கடந்து, வருவது, மூணாறு நீழ்வீழ்ச்சிகளில் பிரபலமானதாகவும் மற்றும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகவும் இதை மாற்றுகிறது.

Chinnakanal Waterfalls

சின்னக்கணல் நீழ்வீழ்ச்சி: புனித தேவிகுளம் நிதியிலிருந்து ஒருவாகும் சின்னக்கனல் நீழ்வீழ்ச்சி, பசுமையான வனத்தி;;ல் சுற்றி மரங்கள் நிறைந்துள்ள நிலையில் அமைந்துள்ளது. இந்த நீழ்வீழ்ச்சி மூணாறிலிருந்து வெறும் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Nyayamakad Waterfalls

நியாயமகட் நீழ்வீழ்ச்சி: இந்த அற்புதமான நீழ்வீழ்ச்சி, முணாரிலிருந்து ராஜமலா வழித்தடத்தில் (மூணாறிலிருந்து 10 கிமீ தொலைவில்) அமைந்துள்ளது. 1600 மீட்டர் உயரத்திலிருந்து சீறிப்பாயும் தண்ணீர், அருகாமையிலுள்ள பகுதிகளின் பசுமைக்க காரணமாகத் திகழ்கிறது. இது ஒரு பிரபலமான பிக்னிக் அமைவிடமாகும். மழைக்காலத்திற்கு பிறகு இங்கு வருகை தருவது சிறப்பாக இருக்கும்.

Kuthumkal Waterfalls

குத்தும்கல் நீழ்வீழ்ச்சி: நீங்கள் மூணாறுக்குச் சென்றால், உங்கள் குடும்பத்துடன் இந்த அற்புதமான பிக்னிக் அமைவிடத்திற்கு கட்டாயணம் செல்லவேண்டும். இது மூணாறிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. உயர் வேகத்தில் நீர் விழுவதனால் உண்டாகும் பனிமண்டலத்தால் சூழப்பட்டிலுக்கும் இந்த நீர்விழுச்சி, பிரம்மாண்ட உயரத்திலிருந்து பாறைகளின் மீது விழுவதை காண கண் கோடி வேண்டும்.

Thoovanam Waterfalls

தூவானம் நீழ்வீழ்ச்சி: பம்பார் நதியிலிருந்து உருவாகும் இந்த நீர்வீழ்ச்சி, சின்னார் வன உயிர் காப்பகத்திற்குள், மூணாறு டவுனிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மலைகாடுகளின் இடையில், டிரெக்கிங் வழியாக மட்டுமே இதற்கு பயணம் செய்ய முடியும். ஆலம்பட்டி வனப்பகுதி செக்போஸ்டிலிருந்து இங்க டிரெக்கிங் செய்ய ஒரு மணி நேரம் ஆகும். வன உயிர்கள் மற்றும் தாவரங்களை பார்வையிடுவது இப்பயணத்தில் சிறந்த அம்சங்களாகத் திகழும்.

Cheeyappara Waterfalls

சீயப்பாறா நீர்வீழ்ச்சிகள்: மூணாறிலிருந்து 40 கிமீ தொலைவில், கொச்சி-மதுரா நெடுஞ்சாலையில், அடிமலி மற்றும் நெரியமங்களம் இடையில் அமைந்துள்ள இந்த நீழ்வீழ்ச்சி, 7 படிகள் கொண்டதொரு அற்புதமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நீழ்வீழ்ச்சியை அருகாமையிலுள்ள டவுன்களிலிருந்து சுலபமாக அடையலாம் மற்றும் இது பாதுகாப்பான மற்றும் சாகசங்கள் நிறைந்த டிரெக்கிங்கிற்கான சாத்தியங்களையும் கொண்டுள்ளது.

Valara Waterfalls

வல்லாரா நீழ்வீழ்ச்சி: அடிமளி மற்றும் நெரியமங்கலம் இடையே மூணாறிலிருந்து 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த வல்லாரா நீழ்வீழ்ச்சிகள் கேரளா மின்சார வாரியத்தின் – தொட்டியாறு நீர்மின்னேற்ற நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்த நீழ்வீழ்ச்சி பல்வேறு நீழ்வீழ்ச்சிகளின் கிளையாக பசுமை நிறைந்த சுற்றுப்புறங்களின் மத்தியில் பேரழகுடன் திகழ்கிறது. 1000 மீட்டர் உயரத்திலிருந்து விழும் இந்த நீழ்வீழ்ச்சியை கண்டுகளிக்க இரு கண்கள் போதாது.

மூணாறை அடைவது எப்படி?
இரயில் வழியாக: எர்ணாகுளம் (130 கிமீ) மற்றும் அலுவா (140 கிமீ) ஆகிய இரண்டு நிலையங்களும் மூணாறுக்கான இரண்டு முதன்மை இரயில் நிலையங்களாகும்.

சாலை வழியாக: கொச்சினிலிருந்து 130 கிமீ தொலைவில் அமைந்துள்ள மூணாறை சாலை வழியாக (தேசிய நெஞ்சாலை எண் – 49) 3 மணி நேரப் பயணத்தில் அடையலாம். கோத்தமங்கலம் மற்றும் அடிமளி இடையில் பயணிக்கையில், தேயிலை தோட்டங்களில் அற்புதமான நறுமணத்தை நீங்கள் உணர்ந்து மகிழலாம். இது தவிர்த்து, அழகான காடுகள் மற்றும் அற்புதமான நீழ்வீழ்ச்சிகள் வழித்தடம் முழுக்க நிறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here