சுந்தரவனக்காடுகள் அருகில் அமைந்துள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

0
1756

மேற்குவங்கத்தில் அதிக சுற்றுலாப்பயணிகள் வருகையைக் கொண்டுள்ள சுற்றுலா அமைவிடங்களில் ஒன்றாக சுந்தரவனக்காடுகள் திகழ்கின்றன. உலகப்புகழ் பெற்ற ராயல் வங்காளப் புலிகளின் மிகப்பெரிய இயற்கை அமைவிடமாக இது திகழ்கிறது. எனினும் வங்கதேசத்தில் அமைந்துள்ள இப்பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள், பிரபலமான அலையாத்தி காடுகளை மட்டுமே பார்வையிடுகின்றனர். கீழ்காணும் பகுதிகளையும் தங்களது பயணப் பட்டியலில் சுற்றுலாப் பயணிகள் சேர்க்கலாம். இதில் சிறந்த விஷயம் யாதெனில், சுந்தர வனக்காடுகளை மையமாகக் கொண்டு இவற்றை சுற்றுப்பார்க்கலாம் என்பதே.

Sajnekhali Bird Sanctuary

சஞ்னேகலி பறவைகள் சரணாலயம்: பல்வேறு எக்ஸாட்டிக் பறவைகள் (ஸ்பாட்டட் பில்டு பெலிகன், கேஸ்பியன் டெர்ன், ஃபிஷ் ஈகிள், வொயிட் பெல்லீடு சீ ஈகிள், ஆஸ்பிரே ஹெர்ரிங் கல், ஓபன் பில்டு ஸ்டோர்க் போன்றவைகள்), பல்வகைப்பட்ட ஹெரான்கள் (கிரீன் பெக்டு ஹெரான், பர்பிள் ஹெரான், நைட் ஹெரான், கிரே ஹெரான் போன்றவைகள்) மற்றும் வொயிட் ஐபிஸ், கிங்ஃபிஷர், எக்ரெட், பாரடைஸ் ஃபிளைகேட்சர் போன்றவைகள் இங்கு கண்டுகளிக்கலாம். குளிர்காலங்களில் மிகுந்த தனித்துவம் வாய்ந்த டோவிட்சர்கள் இங்கு புலம்பெயர்வதும் நடைபெறும்.

Kapil Muni Ashram

கபில் முனி ஆஷ்ரம்: கங்கை மற்றும் வங்காள விரிகுடா சந்திக்கும் கங்காசாகர் அல்லது சாகர்த்வீப் பகுதியில் அமைந்துள்ள இதை கொல்கத்தாவிலிருந்து நம்கானா வழியாக சுலபமாக அடையலாம். ஹிந்து பக்தர்கள் குழுமும் இந்த அமைவிடத்தில், மகர சங்கராந்தி அன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் குழுமி பூஜைகளில் ஈடுபடுவதும் மற்றும் புனித நீரில் குளிப்பதும் அவர்களது பாவத்தை போக்குவதாக நம்பப்படுகிறது.

Kanak Island

கணக்: சுந்தரவனக்காடுகளில் அமைந்துள்ள கனக் தீவு, ஆலிவ் ரைட்லி ஆமைகள் (உலகின் மிகச்சிறந்த ஆமைகள் வகையைச் சேர்ந்த அழியும் நிலையிலுள்ள உயிரனம்) குஞ்சுபொறிப்பு அமைவிடமாகத் திகழ்கிறது. இவைகள் கடலிலிருந்து 100 கிமீ எதிர்திசையில் பயணித்து, சுந்தரவனக்காடுகளில் முட்டை பொறிப்பது குறிப்பிடத்தக்கது. கானக் தீவின் மற்றொரு ஈர்ப்பு புலிகளாகும். பெரிய அளவிலான டால்ஃபின்கள், கடற்பன்னி, மீன்பிடிக்கும் பூனைகள், இந்திய நரிகள், காட்டுப்பூனைகள், இந்திய புனுகுப்பூணைகள், சாம்பல் கீரிப்பிள்ளைகள், மான்கள், காட்டுப் பன்னிகள், பறக்கும் நரிகள், குரங்குகள் மற்றும் எறும்புண்ணிகளை காட்டில் பார்க்கலாம்.

Jambu Dwip

ஜம்பு டுவிப்: 30-45 நிமிடங்களில் படகில் பக்காலியிலிருந்து இந்த அலையாத்தி தீவுகளை அடையலாம். கொல்கத்தா நகரிலிருந்து 130 கிமீ தொலைவில் மேற்கு வங்கத்தின் தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ளது. உங்கள் கண்களாலேயே தீவின் இரு முனைகளையும் காணும் அளவிற்கு இது ஒரு சிறிய தீவாகும். மனம் மயக்கும் அழகினைக் கொண்டுள்ள இந்த தீவு ஏறக்குறைய மனித நடமாட்டம் முற்றிலும் அற்ற தீவாகும். புலம்பெயரும் பறவைகள், கடற்பறவைகள் மற்றும் சிவப்பு நண்டுகளை இங்கு காணலாம்.

Henry Island

ஹென்றி தீவு: கொல்கத்தாவிலிருந்து 130 கிமீ தொலைவில் பக்காலிக்கு அருகே அமைந்துள்ள இது மற்றுமொரு தனிப்பட்ட தீவாகும் மற்றும் வழக்கமான நாட்களில் பயணிகள் முற்றிலும் வருகை தராத தன்மையை இது கொண்டுள்ளது. இந்த புத்தம் புதிய கடற்கரைக்கான பாதை புகைப்படப் புத்தகங்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பசுமையான கனோபி மரங்கள் சுற்றியமைந்துள்ள குழிவான நுழைவாயில் கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ளது. இக்கடற்கரையின் மணற்பரப்பு பளபளப்பாகவும் மற்றும் வெண்மையாகவும் அமைந்திருக்கும். தண்ணீர் நீலமும்-பச்சையும் கலந்து அமைந்திருக்கும். நகரவாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கான சிறந்த அமைவிடமாக இது திகழ்கிறது.

Originally written by Samadrita Bhattacharjee. Read here.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here