கொச்சினில் உள்ள 5 பாரம்பரிய உணவகங்கள்

0
2197

சைனீஸ், இத்தாலியன், வட இந்திய மற்றும் அசல் கேரள உணவுகள் என அனைத்து வகைப்பட்ட உணவு வகைகளும் கொச்சினில் கிடைக்கப்பெறுகிறது. இந்நகரின் பல்வேறு மூலை முடுக்குகளிலும் சுற்றியலைந்து, கொச்சின் நகரின் சில மிகப்பழமையான உணவகங்களில் பட்டியலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இவைகள் கொச்சின் உணவு கலாச்சாரத்தில் ஒரு பகுதியாக பல தலைமுறைகளாகத் திகழ்கிறது.

Bharath Coffee House

பாரத் காஃபி ஹவுஸ்: இந்த உணவகம் துவங்கப்பட்ட ஆண்டு துல்லியமாகத் தெரியவில்லை. எனினும் இங்குள்ள லூயில் ஹாலில் இருக்கும் ஒருகல்வெட்டின் படி, பாரத் காஃபி ஹவுஸ் உணவகம் முதலாம் உலகப் போh சமயத்தில் துவங்கியதாக தெரியவருகிறது. இட்லி, தோசை முதல் சப்பாத்தி ஃ பூரி வரை பலதரப்பட்ட தென்னிந்திய சைவ உணவுகள் மற்றும்ட இந்தியாவின் சமோசா வகைகள் மற்றும் கேரளாவின் பிரத்தியேக உணவு வகையான அடா இதன் சிறப்பம்சங்களாகும்.

எர்ணாகுளம் சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து – 3 கிமீ

Hotel Kayikkas

ஹோட்டல் கயீகாஸ்: இந்நகரின் மிகப்பழமையான அசைவ உணவு விடுதியாகத் திகழும் இது, அதன் சிக்கன் பிரியாணிக்காக பெயர்பெ ற்றதாகும். சிறு நகரங்களில் இந்த உணவகம் அவுட்லெட்களைக் கொண்டிருக்கும் போதிலும், முக்கிய கிளை மட்டஞ்சேரியில்அ மைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் ஒரு சிறிய இடத்தில் துவக்கப்பட்ட இந்த உணவகம் அதன் பின் பிரபலமானதாக மாறியது என்று மூத்தோர்கள் தெரிவிக்கின்றனர். இந்த உணவகத்தை நோக்கி மக்களை படையெடுக்கச் செய்யும் சிக்கன் பிரியாணியின் சமையல் குறிப்பு இரகசியத்தை யாரும் இதுவரை அறியவில்லை.

எர்ணாகுளம் சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து – 11 கிமீ

Bharat Hotel

பாரத் ஹோட்டல் (டீவுர்): 1964 – ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த உணவகம், நகரின் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. கொச்சின் பேக்வாட்டர்ஸ் கரையோரத்தில் சுபாஷ் பூங்காவில் இது அமைந்துள்ளது. உயர்தர சைவ உணவுவகைளை வழங்கும் இ;நத உணவகத்தின் சூழலமைப்பு மற்றும் சேவை மிகவும் அற்புதமானதாகும். இதன் காக்டெயில்கள் மற்றும் பாம்பே சேட்கள் மற்றும் பிற சைவ உணவுகள் மிகவும் சுவையானதாகும். இங்கு நீங்கள் அடிக்கடி மலையாள திரைப்பட பிரபலங்கள் அல்லது அரசியல் தலைவர்களை சந்திக்கலாம்.

எர்ணாகுளம் சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து – 8 கிமீ

Hotel Colombo

ஹோட்டல் கொழும்பு: இந்த உணவகத்தின் பெயரிலுள்ள இலங்கைத்தொ டர்பு குறித்து யாரும் தெரியவில்லை. எனினும், 1952 – ல், லங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்களால் இந்த உணவகம் துவக்கப்பட்டிருக்கலாம் என உள்ளுர்வாசிகள் கருதுகின்றன. இந்த உணவகத்தின் முகப்பில், “புதிய தலைமுறையினருக்கான பாரம்பரிய சுவை” என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது, பாரம்பரிய மலையான உணவை நவீன தன்மையுடன் நீங்கள் இங்கு பெறலாம். மீன் கறிகள், ஷெவெர்மாக்கள், கபாப்கள் மற்றும் அரேபிய உணவு வகைகள் இங்கு கட்டாயம் முயற்சிக்கப்பட வேண்டியவையாகும்.

எர்ணாகுளம் சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து – 2 கிமீ

Grand Hotel

கிராண்ட் ஹோட்டல்: 1973 – ம் ஆண்டு நிறுவப்பட்ட இ;ந்த உணவகம் பல்வேறு சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை வழங்குகிறது. பாரம்பரிய கேரளா உணவு வகைகளிலிருந்து, மீன் கறிகள் முதல் சிரிய மற்றும் மங்கோலிய உணவு வகைகள் வரை அனைத்தும் இங்கு கிடைக்கிறது. கறிமீன் பொலிச்சது, கிரீம் கேரமல், மீன் பிரியாணி மற்றும் நதன் சத்யா ஆகிய உணவு வகைகள் இங்கு கட்டாயம் முயற்சிக்கப்பட வேண்டியவையாகும்.

எர்ணாகுளம் சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து – 700 மீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here