அதிகபட்ச பக்தர்கள் வருகையைக் கொண்டுள்ள 5 கோவில்கள்

0
503

இந்தியா, கடவுள்களும் மற்றும் பண்டிகைகளும் நிறைந்த நாடாகும். நாடு முழுவதும் உள்ள பல இலட்சம் கோவில்களில், சில பிரபலமான கோவில்களும் உள்ளன. கோவில்களை மதிப்பிடுவது அல்ல இதன் நோக்கம். அவற்றின் பிரபலத்தன்மையின் அடிப்படையில், தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை புரியும் கோவில்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஆலயம்

Tirupati Venkateswara Temple

தினசரி பக்தர்கள் எண்ணி;கை: 65,000 முதல் 70,000 வரை

அடையும் வழி: திருப்பதி இரயில் நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

உச்சபட்ச எண்ணிக்கையிலான தினசரி பக்தர்கள் வருகையைக் கொண்டுள்ள கோவிலாகத் திகழும் இக்கோவில், விஷ்ணு பகவானின் எட்டு புனித இருப்பிடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கலியுகம் உலகில் நீடிக்கும் வரை இச்சிலை இங்கிருந்து, பக்தர்கள் அவர்களது கவலைகளை போக்க உதவும் என்று ம்பப்படுகிறது.

வைஷ்ணவி தேவி கோவில்

Vaishno Devi

தினசரி பக்தர்கள் எண்ணி;கை: 60,000 முதல் 63,000 வரை

அடையும் வழி: காத்ரா இரயில் நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்தியாவிலுள்ள இந்துகள் மத்தியில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகத் திகழும் இக்கோவிலை அடைய 13 கிமீ மலையில் பயணிக்க வேண்டும். கடவுளின் அழைப்பு இன்றி இக்கோவிலுக்கு வருகை தர எவராலும் முடியாது என்று நம்பப்படுகிறது. இக்கோவிலுள்ள சென்று வருவது, நீடித்த வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை சாத்தியமாக்கும் என்று நம்பப்படுகிறது.

பத்மனாபஸ்வாமி கோவில்

Padmanabhaswamy Temple

தினசரி பக்தர்கள் எண்ணி;கை: 50,000 முதல் 55,000 வரை

அடையும் வழி: திருவனந்தபுரம் இரயில் நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

தங்கள் வளத்திற்காக வேண்டும் பக்தர்கள் இங்கு காணிக்கையாக தங்கத்தை அளிக்கின்றனர். இக்கோவிலுள்ள எந்த அளவிற்கு நீங்கள் தருகிறீர்களோ அதற்கு பல மடங்காக உங்களுக்கு வளம் சேரும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். தற்போதைய உலகின் மிகச்செல்வச் செழிப்பு வாய்ந்த கோவிலாக இது திகழ்வதில் ஆச்சரியமல்லை!

தங்கக்கோவில்

Thiruvananthapuram

தினசரி பக்தர்கள் எண்ணி;கை: 40,000 முதல் 45,000 வரை

அடையும் வழி: அம்ரித்ஸர் இரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

ஹர்மந்திர் சாஙிப் என்றும் அழைக்கப்படும் இப்புனிதத்தலம், சீக்கியர்களின் மிக புனிதமாக வழிபாட்டிடமாகத் திகழ்கிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகயைச் சேர்ந்த சீக்கியர்கள் பஞ்சாபிலுள்ள இப்புனிதத்தலத்திற்கு குவிகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய சமைலறைகளின் ஒன்றாகத் திகழும் இந்த குருத்வாராவில், பக்தர்களுக்கு சுவையான லங்கர் உணவு வழங்கப்படுகிறது.

ஜெகன்னாதர் ஆலயம்

Jagannath Temple

தினசரி பக்தர்கள் எண்ணி;கை: 30,000 முதல் 33,000 வரை

அடையும் வழி: பூரி இரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு இந்தும் தனது வாழ்வில் கட்டாயம் காண வேண்டிய வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இதன் கடவுள், கிருஷ்ண பகவானிக் மறு அவதாரமாகக் கருதப்படும் ஜெகன்னாதராவார். 12 – ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அழகியல் மிகுந்த நகரம், ஆன்மீகம் எழில்கொஞ்சும் பகுதியாகவும் மற்றும் அழகியல் மிகுந்த இடமாகவும் திகழ்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here