அஹில்யா மண் – வெறும் கோட்டை என்பதையும் மீறிய அற்புதப் படைப்பு!

0
1107

இன்று, பிரபலமான அஹில்யா கோட்டை நதிக்கரையோரத்தில், ஒவ்வொரு வருகையாளரையும் மகிழ்விக்கும் வகையில் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. அஹில்யா பாய் ஹொல்கர் என்னும் பேரரசியின் தலைமையமாகத் திகழ்ந்த இந்த இடம், தற்போது ஒரு சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது மற்றும் அவரது வாழ்வின் சிறப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஒரு சிறிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மஹேஷ்வரின் இப்பெண் ஆட்சியாளர் கால்வாய்கள், கோவில் மற்றும் நாட்டின் கலாச்சார அம்சங்களை புனரமைத்ததில் பெரும் பங்காற்றியுள்ளார். தான் ஆட்சி செய்த பகுதியில் மட்டுமின்றி, வாரணாசி போன்ற தூரப்பிரதேசங்களிலும்.

அஹில்யா கோட்டை – ஈடுஇணையற்ற கட்டிடக்கலை அழகு!

blog-post-for_-an-experience-straight-out-of-the-18th-century_7-1

நர்மதா கரையோரம் ஓங்கி உயர்ந்து அமைந்துள்ள அஹில்யா கோட்டை, தங்குவதற்கு ஒரு அற்புதமான இடமாகும். இன்று அதன் ஒரு பகுதி, சூழலியல் சார்ந்த பாரம்பரிய ஹோட்டலாக, இறுதி இந்தூர் மஹாராஜாவின் மகனும் மற்றும் வாரிசுமான இளவரசர் ரிச்சர்டு ஹோல்கர் அவர்களால், 14 அலங்கரிக்கப்பட்ட அறைகளாக மாற்றப்பட்டது. பழங்காலத்து கற்தரைகள், புராதான ஷட்டர்டு கதவுகள், செதுக்கப்பட்ட வளைவுகள், மறைநிலை டர்ரெட்கள், பசுமையான தோட்டங்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறான கட்டமைப்பு கொண்ட அறைகள் என, இககட்டிடம் சிறப்பான முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

விண்டோ ஆப் பிளிஸ் –

blog-post-for_-an-experience-straight-out-of-the-18th-century_5-1

அஹில்யா பாய் பூஜைகள் செய்த நூற்றுக்கணக்கான லிங்கங்கள் அடங்கியதொரு லிங்கார்ச்சனை கோர்ட்யார்டு உள்ளது. இதில் தற்போது நீம் மற்றும் இம்லி ஆகிய இரண்டு பெயர்களில் ஜன்னல் இருக்கைகளுடன் நர்மதை நதியில் அழகை அள்ளிப்பருக ஏற்றவாறு இரண்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்ஸ் ஆன் தி ஷோர் –

blog-post-for_-an-experience-straight-out-of-the-18th-century_4-1

சில படிகள் முன்னேறிச்சென்றால், கோட்டையிலிருந்து கீழ் நோக்கிச்செல்லும் படிகள் ஒரு இடைவழியைக் கொண்டிருக்கும். அஹில்யா கோட்டையின் சிறந்த அம்சங்களில் ஒன்று, இந்திய வாழ்க்கை முறை வளர்ந்த நதியின் அழகை படிகளில் கண்டு இரசிப்பதே ஆகும். ஒவ்வொரு நாள் காலயும் சூரியன் நர்மதை நதியின் மீது உதிக்கும் போதும், மக்கள் புனித நீராடுவதையும் மற்றும் புஜை புனஸ்காரங்கள் செய்து மந்திரங்களை ஓதுவதையும் பார்க்கலாம்.

இறைவனுடன் இணைவது சுலபமாகும் இடம்

blog-post-for_-an-experience-straight-out-of-the-18th-century_1

பூசாரிகள் மற்றும் இடைதரகர்களின் தொல்லையின்றி, நிம்மதியாக இருப்பதை சாத்தியமாக்குவதே மஹேஷ்வரின் சிறந்த அம்சமாகும். இங்குள்ள கோவில்கள் இன்னும் வர்த்தகமயமாக்கப்டாததால், ஏதேனும் ஒரு மூலையில் அமர்ந்து இறைவனுடன் இணைவது சுலபமானதாக திகழ்கிறது.

பிரபலமான மஹஷ்வரி புடவைகள் நினைவிற்கு வருகிறதா?

blog-post-for_-an-experience-straight-out-of-the-18th-century_2

சிவ பக்தையான அஹில்யா பாய், மக்களுக்காக பல்வேறு கோவில்களை வழங்கியதோடு மட்டுமின்றி, இன்றும் பெண்களாக மிகவும் விரும்பப்படும் அழகு மிகுந்த ஜவுளிகளையும் வழங்கியுள்ளார். மஹஷே;வர் நெசவு மையம், பிரபலமான மற்றும் அழகியல் மிகுந்த மஹேஷ்வரி புடவைகளை உருவாக்குகிறது. எளிமையான மற்றும் அதே நேரத்தில் அழகியல் மிகுந்ததாகத் திகழும் இவைகள், நவீன ஆடையலங்காரங்களுக்கும் ஏற்றதாகத் திகழ்கிறது.

நிலவொளிப்பயணம் –

blog-post-for_-an-experience-straight-out-of-the-18th-century_3

மாலை வேளையில், குளிர் சூழ் நிலையில், வண்ணமயமான படகுகளில் மிதந்து, மஹேஷ்வர கோவிலின் பின்புறும் சூரிய மறைவதை கண்டுகளிக்கலாம். இரவு துவங்கிவுடள், ஆயிரக்கணக்கான தியாக்கல் நதியியல் கீழ்நோக்கில் பயணிக்கும் வகையில் ஏதேனும் ஆசைக்காகவோ அல்லது நினைவிலோ அனுப்பப்படுகிறது. இது ஒரு அற்புதமான அழகும் மற்றும் நினைவில் நிற்கும் எழிலும் நிறைந்ததொடு இடமாகும்.

சிறப்புவாய்ந்த பாலைவன நகரம் மந்து மற்றும் பிரபலமான தீவுக்கோவில் ஓம்கரேஷ்வரை அருகாமையில் கொண்டுள்ள அஹில்யா மற்றும் மஹேஷ்வர், எளிமை, அழகியல் மற்றும் புத்துணர்வு கொண்ட, என்றும் நினைவில் நீடிக்கும் அழகுகொஞ்சும் அமைவிடமாகும்!

பயணக்குறிப்பு – மஹேஷ்வருக்கு அருகாமையிலுள்ள இரயல் பாதை அங்கிருந்து 39 கிமீ தொலைவில்அமைந்துள்ள பர்வாஹா ஆகும் மற்றும் அருகாமையில் அமைந்துள்ள முதன்மை இரயில் நிலையம் இந்தூர் ஆகும். மும்பை, டெல்லி, போபால் மற்றும் பல்வேறு இந்திய நகரங்களிலிருந்து வரும் இரயில்கள் இங்கு நிற்கும். இரயில் நிலையத்திலிருந்து மஹேஷ்வருக்கு டாக்சிகள் சுலபமாகக் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here