இந்தியாவின் அதிகம் அறியப்படாத 8 அற்புதமான கோட்டைகள்

0
1675

இவைகள் பல போர்களை சந்தித்துள்ளன, இதன் கட்டுப்பாட்டிற்காக பலர் இரத்தம் சிந்திருயுள்ளனர் எனினும், இன்றும் தங்களது வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் இவைகள் கம்பீரமாக நிலைத்து நிற்கின்றன. இந்தியா முழுவதும் பல்வேறு அற்புதமான கோட்டைகள் அமைந்துள்ளன. அவற்றுள் பல மிகப்பிரபலமாக இருப்பினும், சிலர் தங்களது கம்பீரமான தன்மைகளையும் மற்றும் கூறப்படாத வரலாற்றினையும் தன்னகத்தே கொண்டுள்ளன. கடந்த முறை நீங்கள் ராஜஸ்தானிற்கு பயணம் செய்தபோது பார்த்த கோட்டைகளே சிறந்தவை என நீங்கள் கருதினால், சற்று பொறுங்கள் கீழ்காணும் பட்டியலில் இன்றும் சில அற்புதமான மற்றும் அதிகம் அறியப்படாத கோட்டைகள் உள்ளன.

Basgo Fort

லடாக் பஸ்கோ கோட்டை: புத்தமடாலயமாகத் தற்போது திகழும் பஸ்கோ, லேவிலிருந்து 40 கிமீ தொலைவில், நம்கியால் ஆட்சியாளர்களால் 1680 – ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். பல்வேறு லடாக்கி கதைகளின் உயிர்நாடியாகத் திகழ்கிறது மற்றும் பல்வேறு அரசயில் மற்றும் கலாச்சார விஷயங்களின் மையமாகவும் திகழ்ந்தது. இக்கோட்டை மலையுச்சியில், பாரம்பரிய நகரங்களில் சிதிலிங்களை பார்வையிடும் வகையில் அமைந்துள்ளது.

Rabdentse Fort

சிக்கிம், ரப்டென்ட்ஸே கோட்டை: சிக்கிம்மின் இரண்டாவது தலைநகரமாக 15-19 நூற்றாண்டில் செயலாற்றிய இந்நகரம், அருகாமை கொள்ளைகாரர்களிடமிருந்து பாதுகாப்பினை வழங்கும் முதன்மை வடிவாக்கமாகத் திகழ்கிறது. குர்கர்களால் இக்கோட்டை அழிக்கப்பட்டது. இந்த வளாகத்தில் மாளிகை, கோட்டை மற்றும் சில சோர்டென்களின் சிதிலங்கள் இன்றும் காணப்படுகின்றன. கஞ்சென்ஜங்கா மலைத்தொடரின் மிகச்சிறந்த காட்சித்தோற்றங்களை
இக்கோட்டை அளிக்கிறது. இந்திய அகழ்வாராய்ச்சித் துறையினால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tughlaqabad Fort

டெல்லி, துக்லாகாபாத் கோட்டை: 6 கிமீக்கு மேல் பரந்து விரிந்து அமைந்திருக்கும் இக்கோட்டை, 1321 – ல் கியாஸ்-உத்-தின் துக்ளக் அவர்களால் கட்டப்பட்டதாகும். துக்ளக் வம்சத்தின் அற்புதமான கட்டிடக்கலை பாங்குகளை வெளிப்படுத்தும் வகையில், அதிசிறந்த கல் அலங்காரங்கள் மற்றும் ரூபிள் பதக்கப்பட்ட சுவர்களை இக்கோட்டை கொண்டுள்ளது. ஒரு 600 அடிகள் நீளம் கொண்ட பாதை, கியாஸ் உத்-தின் துக்ளக் மௌசோலியத்தைக் கொண்டுள்ளது.

Diu Fort

டாமன் & டையு, டையு கோட்டை: போர்ச்சுகீசிய காலனி ஆட்சியின் அற்புதங்களில் ஒன்றாக, டையு கோட்டை 2009 – ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. முகாலய பேரரசர் ஹ{மாயுனிடமிருந்து நகரை பாதுகாக்கும் வகையில் 1535 – ம் ஆண்டு இக்கோட்டை கட்டப்பட்டது. இந்தியப் பெருங்கடல் கடற்கரையோரம் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கோட்டை, கடல்களின் அற்புதமான காட்சித்தோற்றங்களை அளிக்கிறது. 17-ம் நூற்றாண்டின் செயின்ட்.பால்ஸ் தேவாலயம் மற்றும்
செயின்ட்.தாமல் தேவாலயம் ஆகிய பல்வேறு கவர்ச்சிகரமான நினைவுச்சின்னங்கள் இந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ளன. வெனிடியன் கோதிக் ஸ்டைல் பங்களாக்களை இக்கோட்டையின் ஜபடா வாயிலில் பார்க்கலாம். மேலும் 5 பாண்டவர்களாக கட்டப்பட்டதாக நம்பபபடும் கங்கேஷ்வர் மஹாதேவ் கோவிலும் இங்கு அமைந்துள்ளது.

Sidhudurg Fort

மஹாராஷ்டிரா சித்துடர்க் கோட்டை: இப்பிராந்தித்தில் மராத்தா சாம்ராஜ்யத்தின் நலனைக் கருத்தில் கொண்டு 1656 – ம் ஆண்டு, சத்ரபதி சிவாஜி மகாராஜா அவர்களால் கட்டமைக்கப்பட்ட இக்கோட்டை, கொங்கன் பிராந்தியத்தில் அரபிக் கடலை பார்த்தபடி அமைந்துள்ளது. இதன் அடித்தளக்கற்களுக்காக 4000 மவுண்டுகள் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மராத்தியர்களின் செயல்திட்டத்தன்மைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இக்கோட்டையின் முக்கிய வாயிலை, வெளியிலிருந்து பார்த்தால் அடையாளம் காண முடியாத
அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. அசல் கில்லேடர்கள் (சப்கல் நாயக் குடும்பம்) இன்றும் இந்தக் கோட்டைக்குள் வசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Bahu Fort

ஜம்மு & காஷ்மீர் பஹர் கோட்டை: இந்த 18ம் நூற்றாண்டு கோட்டை, ராஜ்புத் மன்னர், பஹர் லோசன் அவர்களால் கட்டப்பட்டது. 325 மீட்டர்கள் உயரத்தில், பழைய ஜம்மு டவுனுக்கு எதிரில், தாவி நதிக்கரையில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஜம்மு நகரின் சிறப்பான காட்சித்தோற்றத்தினை இது அளிக்கிறது. இந்த வளாகத்தில் பாவே வாலி மாதா கோவில் உள்ளது. ஒவ்வொரு ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமையின் போது இங்கு அதிகளவிலான பக்தர்கள் குவிகின்றனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக ரீசஸ் வகை குரங்குகள் இந்த கோவில் வளாகத்தில் அதிகளவு வசிக்கின்றன.

Mandu Fort

மத்தியப்பிரதேசம், மன்டு கோட்டை: மன்டு என்னம் சிறிய டவுன் தன்னகத்தே மிக பிரம்மாண்டமான வரலாற்றுப் பொக்கிஷங்களை உள்ளடக்கியுள்ளது. மலையுச்சியல் அமைந்துள்ள இந்த கோட்டை 10ம் நூற்றாண்டில் பர்மார்களால் கட்டப்பட்டதாகும். ஒரு புறம் மல்வா பள்ளத்தாக்க மற்றும் மறுபுறம் நர்மதை ஆறு கொண்டுள்ள அமைவிடம் காரணமாக எவராலும் கைபற்ற முடியாததாக இக்கோட்டை திகழ்ந்தது. இங்கு பல போர்கள் நடைபெற்றுள்ளன. இதைச் சுற்றி ரூப்மதிஸ் பெவிலியின், நீல் காந்த் மாளிகை, ஜஹாஸ் மஹால், ஹோஷங்ஸ் டோம்ப், அஷ்ரஃபி மஹால் மற்றும் பஸ் பஹதூர்ஸ் மாளிகை ஆகியவைகள் அமைந்துள்ளன.

Ranthambore Fort

ரன்தாம்போர் கோட்டை, ராஜஸ்தான்: 944 ஆண்டில் மீனா பழங்குடியினரால் கட்டப்பட்ட இக்கோட்டை, சௌஹன் வம்ச மன்னர், ஹமீர் தேவ் அவர்களது வீரத்தையும் மற்றும் புகழையும் பறைசாற்றும் வகையில் கட்டப்பட்டது. தன்தோம்போர் தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ள இக்கோட்டை, அதைச்சுற்றி அனைத்து பக்கங்களிலும் காடுகளைக் கொண்டுள்ளது. கோட்டைக்கு ஜெயின் மற்றும் வினாயகர் கோவில்கள், ஜோஹி மஹால், பதம் தலாவ் மற்றும் ராஜ்பாக் தலாவ் ஆகியவை நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ளன. தன்தாம்போர் புலிக் காடுகளின்
ஈடுஇணையற்ற காட்சித்தோற்றத்தினை இது அளிக்கிறது.

இந்தியாவின் அபரிமிதமான வரலாறு, வீரப்புதல்வர்களின் புகழ் மற்றும் நாட்டுப்புறக்கதைகளின்வே ராக இக்கோட்டைகள் திகழ்கின்றன. அவற்றை பாருங்கள், இந்தியாவின் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here