உங்கள் வளர்ப்புநாயுடன் இரயிலில் பயணிப்பதற்கான குறிப்புகள்

0
440

“நாய்களே எங்கள் முழு உலகம் அல்ல, ஆனால் எங்கள் உலகை அவையே முழுமையாக்குகின்றன” – ரோஜர் காரஸ்

பெரும்பாலான நாய் உரிமையாளர்கள் அவர்களுடன் செல்லப்பிராணிகளைக் கொண்டு செல்வதை மிகவும் விரும்புவர். இந்திய இரயில்வேயில் அவ்வாறு பயணம் செல்வது கட்டுப்படியாகக்கூடியதா? நீங்கள் குடும்பத்தோடு பயணிக்கையில் இந்த சந்தேகம் ஏற்படச்செய்யும். நீங்கள் இரயில்வே விதிமுறைகளை படிக்க படிக்க அவை மேலும் குழப்பவே செய்யும். எனவே, உங்கள் சந்தேகங்களை தீர்க்க நாங்கள் இதன் வழியாக உதவுகிறோம்.

tips-to-travel-in-train-with-your-pet-dog

உங்களோடு இரயிலில் உங்கள் நாய்களை கொண்டு செல்லலாமா?

ஆம், உங்கள் பயணத்தில் உங்களுக்கு உங்க்ள நாய்களைக் கொண்டு செல்லலாம். அவற்றை உங்களுக்கு நெருக்கமாக,கம்பார்ட்மெண்டில், நீங்கள் முதல் வகுப்பு ஏசியில் பயணிக்கும் போது மட்டுமே வைத்திருக்கலாம். மற்ற நேரங்களில் அவற்றை லக்கேஜாக, பிரேக் அல்லது லக்கேஜ் வேனில் கொண்டு செல்லலாம். உங்களுடன் நீங்கள் பயணத்தின் போது நாயைக் கொண்டு சென்றாலும், அதனால் எத்தகைய தொல்லைகளும் ஏற்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் மற்றும் அவ்வாறு கொண்டு செல்வதற்கு சக பயணிகளின் அனுமதியும் வேண்டும்.

உங்கள் செல்லப்பிராணியை இரயிலில் கொண்டு செல்வதற்கான குறிப்புகள்:

 • உங்களுடன் உங்கள் நாயை நீங்கள் அழைத்துச் செல்ல விரும்பினால், முதல் வகுப்பு ஏசி கிளாஸில் மட்டுமே அது
 • சாத்தியமாகும். கம்பார்ட்மெண்டில் உங்கள் பயன்பாட்டிற்காக நீங்கள் இரண்டு அல்லது நான்கு பெர்த்களை பதிவு செய்ய
 • வேண்டும். இதற்கான கட்டணம் நீங்கள் பயணிக்கும் இரயிலைப் பொறுத்து அமையும்.
 • நீங்கள் ஏசி ஸ்லீப்பர் கோச்கள், ஏசி சேர் கார் அல்லது செகண்ட் கிளாஸ் கோச்களில் பயணிக்கையில் உங்களுடன் நாயைக்
 • கொண்டு செல்ல முடியாது. நீங்கள் அதை, லக்கேஜ் அல்லது பிரேக் வேனில், அதற்கான கட்டணங்களை செலுத்தி கொண்டு
 • செல்ல வேண்டும். பிரேக் வேன்களில் இதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நாய் பெட்டிகள் கிடைக்கும்.
 • உங்கள் நாயை நீங்கள் லக்கேஜ் வேனில் கொண்டு செல்ல விரும்பனால், பார்சல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு,
 • பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும்.
 • பதிவு செய்யாமல் ஏசி முதல் வகுப்பு அல்லது பிரேக் வேனில் நீங்கள் நாயுடன் பயணம் செய்வது தெரியவந்தால், நாயின்
 • எடையின் அடிப்படையில் உங்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் மற்றும் மேலும் கூடுதலாக ஒரு நாய்க்கு ரூ.10 என்னும்
 • அடிப்படையில், குறைந்தபட்ச அபராதம் வசூல் செய்யப்படும். இந்த அபராதங்கள் ப்ரீபெய்டு தன்மையைக் கொண்டிருக்கும்.
 • பார்வை குறைபாடு உள்ளோருக்கு உதவும் “சீயிங் ஐ” நாள் எனில், பிரேக் வேனில் கொண்டு செல்லப்படும் நாய் போன்ற
 • கட்டணமே வசூலிக்கப்படும் என்றாலும், அவற்றை உங்களுடன் நீங்கள் கம்பார்ட்மெண்டில் வைத்துக் கொள்ளலாம்.
 • எனினும், அந்த நாய்கள் பொருத்தமான காலர் மற்றும் செயின்களை அணிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
 • பயணத்தின் போது தேவையான உணவு மற்றும் தண்ணீரை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியது உரிமையாளரின்
 • பொறுப்பாகும்.
 • உங்களுடன் முதல் வகுப்பு ஏசி கம்பார்ட்மெண்டில் நாய் தனியாக இருப்பினும், சக பயணிகளின் ஒப்புதல் அதற்குத் தேவை.
 • சக பயணிகள் பயணத்தின் போது அதற்கு ஆட்சேபனை தெரிவித்தால், நாய் உடனடியாக கார்ட்ஸ் வேனுக்கு அனுப்பப்படும்
 • மற்றும் எத்தகைய கட்டணமும் திரும்பத்தரப்பட மாட்டாது.
 • நாய் ஏதேனும் விதிமுறைகளை மீறினால், உடனடியாக பிரேக் வேனுக்கு மாற்றப்படும் மற்றும் லக்கேஜ் கட்டண
 • விகிதங்களில் ஆறு மடங்குகள் பயணியிடம் அதற்காக வசூலிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here