Simplifying Train Travel

ரிஷிகேஷ்: இந்தியாவின் சாகச தலைநகரம்

90களின் இறுதியில் ஆசிரமங்கள் மற்றும் தியான வகுப்புகளின் மையமாகத் திகழ்ந்த ரிஷிகேஷ் “உலகின் யோகா தலைநகரம” ஆனது. அடர் காடுகள், பாய்ந்தோடும் புனித நதி போன்றவைகள் நிறைந்த இப்பகுதியில் வடபகுதி இச்செயல்பாடுகளுக்கான மையமாகத் திகழ்ந்தது. ஆனால், ரிஷிகேஷ் என்பது ஆன்மீகம், யோக மற்றும் மன விரிவாக்கம் தொடர்பானது மட்டுமல்ல. தற்காலத்து சுற்றுலாபயணிகள் எதிர்நோக்கும் சாகசங்கள் மற்றும் குதூகலங்கள் நிறைந்த விஷயங்களை இப்பாரம்பரிய நகரம் கொண்டுள்ளது.

டிரெக்கிங் மற்றும் கேம்பிங்

Rishikesh Trekking

ரிஷிகேஷ் சாகச செயல்பாடுகள் டிரெக்கிங் மற்றும் கேம்பிங் பயணங்களுடன் துவங்குகிறது. கௌரவம் வாய்ந்த மலையேற்ற அமைப்பான “நேரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் மவுண்டெயினீரிங், மற்றுமொரு புனிதஸ்தலமான உத்திரகாசிக்கு அருகே அமைந்துள்ளது. இங்கு குதூகலம் மிக்க பயணத்தை உங்களுக்கு வழங்க, தொழில்நுட்ப ரீதியில் திறன்வாய்ந்த வழிகாட்டிகள் உங்களுக்கு கிடைப்பார்கள்.

இந்த பாரம்பரியம் மிக்க சிவாலிக் மலைத்தொடர்கள் உலகம் முழுவதும் பெயர் பெற்றதாக இருப்பினும், இங்குள்ள பல்வேறு அற்புதமான டிரெக்கிங் பாதைகள் தவறவிடக்கூடாதவையாகும். அபரிமிதமான வனப்பகுதிகளைக் கொண்டுள்ள ரிஷிகேஷ் பல்வேறு டிரெக்கிங் பாதைகளைக் கொண்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது சந்திரஷீலா ஆகும். வேலி ஆஃப் பிளவர்ஸ் மற்றும் கௌரி பாஸ் போன்ற பல்வேறு பிரபலமான டிரெக்கிங்குகளுக்கான முதன்மை மைய அடித்தளமாக ரிஷிகேஷ் திகழ்கிறது. இது தவிர்த்து கன்யாபுரி, நீல்கந்த் மஹாதேவ் மற்றும் ஜில்மில் க{ஃபா போன்ற ஒரு தினப்பயண சேருமிடங்கள், வார இறுதி இரசிகர்களை பெரிதும் கவரும் அம்சங்களாகும்.

வொயிட் வாட்டர் ரேஃப்டிங்

Rishikesh White Water Rafting

ஹரித்துவாரில் காணப்படுவதைப் போல் ரிஷிகேஷில் இருக்கும் கங்கை அமைதியானதில்லை. நதியின் இந்த துள்ளலான தன்மையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தண்ணீர் விளையாட்டுகள் இங்கு சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. கௌடியாலா முதல் ரிஷிகேஷ் வரையிலான நிதி, இப்பிராந்தியத்தின் சிறந்த ரேஃப்டிங் பாதையாகத் திகழ்கிறது. 4+ ரிவர் ரேஃப்டிங் ஸ்டிரெட்ச் கொண்டுள்ள கௌடியாலா ஏறக்குறைய 40 கிமீ மேற்பட்ட நீளத்தைக் கொண்டதாகும். இதில் மரைன் டிரைவ், ரோலர் கோஸ்டர், கோல்ஃப் கோர்ஸ், கிளப் ஹவுஸ், இனிஷியேஷன், டபுள் டிரபுள், ஹில்டன், டெர்மினேட்டர், போன்ற பிரபலமான ரேபிட்களும் உட்பட்டுள்ளன. இதை நன்கு அனுபவிப்பதற்கான சிறந்த காலகட்டம் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டமாகும்.

ரப்பெல்லிங்

Rishikesh Rappelling

ரிஷிகேஷின் வடக்கு பகுதியில் இந்த அற்புதமான பாறை முகப்புகள் அமைந்துள்ளன. பாறையேற்றத்தில் அனைத்து வகையிலான பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்படுகின்றன மற்றும் நீண்ட பாறை முகப்புகள் ரப்லெலிங்கிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. ரப்பெல்லிங் எனப்படுவது கிளைம்பர் ஒரு நேரான பாறையிலிருந்து கீழாக, கட்டுப்பாட்டுடன் ஹார்னஸ் மற்றும் கயிறு பயன்படுத்தி இறங்கும் சாகச செயல்பாடாகும். ரிஷிகேஷில் சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து மகிழ்வதற்கான மற்றுமொறு சிறந்த சாகச நிகழ்வாக இது திகழ்கிறது.

பன்ஜீ ஜம்பிங் / ரிவர் கிளிஃப் ஜம்பிங்

Rishikesh Bungee Jumping

இந்தியாவின் மிக உயரமான நிலையான அடித்தளம் கொண்ட பன்ஜீ ஜம்பிங் அமைவிடமாக ரிஷிகேஷ் திகழ்கிறது. மோஹன் சட்டி, அத்தகையதொரு இடமாகும். 10-15 நொடிகள் ஃபிரீ ஃபாலை அனுபவித்த பின், ரப்பர் வயர் மீண்டும் ஒரு முறை உங்களை பாறைகள் மிகுந்த ஹயுல் என்னும் கங்கை நதியின் கிளைநதியின் மீது தொங்கும் அனுபவம் வார்த்தையில் விவரிக்க முடியாததாகும். ஹயுல் நதியை நோக்கியவாறு ஒரு மலையுச்சியில் கேன்டிலீவர் அடித்தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து, 1 கிமீ-நீள ஃபிளையிங் ஃபாக்ஸ் லைன் மற்றொரு சிறந்த அட்வென்சர் பொனான்ஸாவாக, ஆசியா கண்டத்திலிலேயே மிகவும் நீளமானதாகத் திகழ்கிறது. பின்னர் 80 மீ நீளம் கொண்டதொரு ஊஞ்சலும் உள்ளது

துடிபபான செயல்பாடுகள் அல்லவா? வாருங்கள் அவற்றை அனுபவித்து மகிழுங்கள்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *