ஹம்பி: மாயாஜாலம் நிறைந்த கடந்தகாலம் நிஜமாகுமிடம்

0
1233

வடக்கு கர்நாடகாவில் அமைந்துள்ளதொரு சிறிய டவுனான ஹம்பி, விஜயநகரப் பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்ததாகும். உலகம் முழுவதிலுமிருந்து படையெடுத்து பல்வேறு கொள்ளைகளுக்கு ஆளானதே இதன் வளம் மற்றும் செழிப்பிற்கு சான்றாகும். இதன் அழகியல் மிகுந்த பாறை வடிவங்கள் நிறைந்த நிலப்பரப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தையொட்டிய, நகர பரபரப்புகளைக் கடந்த மந்திர அனுபவத்தை அளிக்கும்.

பழங்காலத்து கதைகள் மற்றும் பதியங்கள்

விஜயநகரப் பேரரசின் சிதிலங்கள் ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகிறது. இதன் நினைவுச்சின்னங்கள் 14-ம் நூற்றாண்டின் பதிப்புகளுக்காக பெயர் பெற்றதாகும். இந்த நுட்பமான பதிப்புகள் வீழ்ந்த சாம்ராஜ்யங்கள் மற்றும் ராணிகள், குடியிருப்புவாசிகள் மற்றும்நி லப்பரப்பிற்குரிய விவசாயிகள் மற்றும் ஆண்கள், பெண்கள், அவர்களது அன்பு, “தேவதாசிகள்” என பல விஷயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

500 – க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சுவடுகள் நிறைந்த இதன் முக்கிய அம்சம் ஒவ்வொரு இடத்திலும் உங்களுக்கு கிடைக்கும் இன்ப அதிர்ச்சிகளே ஆகும்.

Vitthala Complex - Hampi

  • விட்டலா கோவில் வளாகம் – 16 – ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த விட்டலா ஆலையம், இதன் தூண்கள் மற்றும் கல் தேருக்காக பெயர் பெற்றதாகும். இதன் அறைகள் பல்வேறு சிற்பங்கள் பதிக்கப்பட்ட பிரம்மாண்டமான கிரானைட் தூண்களை உடன் கொண்டுள்ளது. இந்த வளாகத்திற்குள் அமைந்தள்ள கல் தேர், ஹம்பியின் மிகப்பிரலபானதொரு அடையாளமாகும். இதன் முக்கிய அம்சம், கைகளால் தட்னால் இசையை எழுப்பும் இசை தூண்களாகும்.

Virupaksha Remple - Hampi

  • விருபக்ஷா கோவில் – ஹம்பியின் மிகப் பழமையான கோவிலாகத் திகழும் இக்கோவில், கிபி 7-ம்நூற்றாண்டு கட்டப்பட்டாகும் மற்றும் இது முதல் இடைவிடால் இக்கோவில் தொடர்ந்து செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் நுழைவாயில் பிரபலமான ஹம்பி அங்காடியாகும்.

Hazara Rama Temple Complex - Hampi

  • ஹஸாரா ராமா கோவில் வளாகம் – 15-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஜயநகர மன்னர் தேவராயா அவர்களால் இக்கோவில் கட்டமைக்கப்பட்டது. இதன் உள்ளேயும் மற்றும் வெளியிலும் அமைந்துள்ள ஆயிரக்ககணக்கான புடைப்புகள் மற்றும் பதிப்புகள் ராமாயனக் கதையை வெளிப்படுத்துவதனால் இதற்கு “ஹஜாரா ராமா” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.

The Lotus Mahal - Hampu

  • தாமரை மஹால் – விஜயநகரப் பேரரசின் அரச குடும்பத்துப் பெண்களால் பிரத்தியேகமான பயன்படுத்தப்பட்ட இந்த அற்புதமான கட்டமைப்பு, ஹம்பியின் மிக சில, படையெடுப்பால் பாதிக்கப்படாத பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

Gejjala Mantapa - Hampi

பயணக்குறிப்பு – அருகாமையிலுள்ள இரயில் தடம் ஹோஸ்பேட் ஆகும். இங்கிருந்து 13 கிமீ தொலைவில் ஹம்பி அமைந்துள்ளது. இங்கு அடைய நீங்கள் டாக்ஸி அல்லது கேப் பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here