ஆசியாவின் மிகப் பெரிய மசாலா சந்தைப் பற்றி 5 சூப்பர் உண்மைகள்

0
727

புராணி தில்லியின் காட்சிகள் ஒரு போதும் நம்மை கவர்ந்திழுக்காமல் இருக்காது. மற்றொரு கட்டத்தில், ஆழமாக பழைய கிடங்குகளுக்கு வழிவகுக்கும் இந்த நூற்றாண்டுகால பழைய கடைகளின் சுவர்களில் வரிசையாக, எண்ணற்ற கோணிப்பைகளில் அனைத்து அளவுகளிலும் சிவப்பு மற்றும் மஞ்சள் மிளகாய்கள் உள்ளன. இது தான் காரி பாவோலி, ஆசியாவில் மிகப் பெரிய மசாலா சந்தை.

ஜமா மஸ்ஜித்தின் அருகில் செங்கோட்டைக்கு பக்கத்தில், சாந்தினி செளக்யின் மேற்கு முனையில் அமைந்துள்ள, காரி பாவோலி அதிக அளவில் வரலாற்று தொடர்புடையதாக உள்ளது. இந்த மிகப் பெரிய மசாலா சந்தைப் பற்றி நீங்கள் ஒருபோதும் அறியாத தனிப்பட்ட உண்மைகள் சில இங்கே உள்ளன.

Khari Baoli is 4 centuries old

இது நான்கு நூற்றாண்டுகள் பழையது!
காரி பாவோலி சந்தை ஃபதேபுரி மஸ்ஜித் (1650-ல் கட்டப்பட்டது) போன்று அதே காலத்தில் தான் உருவானது. இது ஷாஜகானின் மனைவிகளில் ஒருவரான, ஃபதேபுரி பேகம் அவர்களால் கட்டப்பட்டது. இது காரி பாவோலி என்று அழைக்கப்பட்டது இதில் காரி என்றால் உப்பான மற்றும் பாவோலி என்றால் படி-கிணறு. 1930-களில், எண்ணற்ற குடும்பங்கள் பஞ்சாபிலிருந்து தில்லிக்கு குடிபெயர்ந்து தில்லியின் பல்வேறு பகுதிகளில் குடியேறினார்கள். அவர்களில் பலர் காரி பாவோலியில் மற்றும் அருகிலுள்ள சந்தைகளில் கடைகளை துவங்கினார்கள்.

A true Masala Land

• உண்மையான ‘மசாலா’ நிலம்
ஆசியாவின் மிகப் பெரிய மசாலா சந்தையில் நீங்கள் பல்வேறு வகையான உள்ளூர் மற்றும் அந்நிய மசாலாக்களை தேர்ந்தெடுக்கலாம். ஆப்கானிஸ்தானிலிருந்து உலர்ந்த கொடிமுந்திரிப்பழங்கள் மற்றும் முசுக்கொட்டைப்பழங்கள் முதல் காஷ்மீரிலிருந்து உலர்ந்த பிளம்ஸ் வரை, உலர்ந்த பழங்கள் ஒவ்வொன்றின் நிறைவான நறுமணத்துடன் பல்வேறு மசாலா வகைகளின் காட்சியோடு நீங்கள் ஒரு முறை சந்தையில் நுழைந்தால் இது வசீரிக்கும் சூழ்நிலையாகும்.

 A HUB FOR AYURVEDIC MEDICINES

• சிறந்த, ஆரோக்கியம்
இங்கே எல்லையில்லாத வகையிலான ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் மருந்துகள் கிடைக்கின்றன. அவைகள் உங்களுக்கு புதைபடிவங்களாக தோன்றும் ஆனால் உண்மையில் குறிப்பிட்ட நோய்களுக்கு நல்ல நிவாரணமளிக்கும் அரிய மூலிகைகள் மற்றும் மருந்துகளாகும். தீபாவளிக்கு முன், சந்தையில் மக்கள் கூட்டம் குறிப்பாக உலர்ந்த பழங்கள் வாங்குவதற்காக தொடங்குகிறது.

Order amidst the chaos

• குழப்பத்தின் மத்தியில் ஒழுங்குமுறை
குறுகலான பாதைகள் மற்றும் நெரிசலான தெருக்களில், ஒவ்வொரு நாளும் காலையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் கடைக்காரர்கள் அவர்களின் சரக்குகளை நேர்த்தியாக ஏற்பாடு செய்து அவர்களின் தினசரி வணிகத்திற்காக தயாராகுகிறார்கள். ஒவ்வொரு காலையிலும், காரி பாவோலியின் பண்டைய தெருக்கள் எழுச்சி பெறுகின்றன. அதே பாதையை இரவில் கடப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், இதற்கு எதிரான காட்சியாக அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும். எனவே ஒவ்வொரு காலையிலும் இந்த கடைகள் அமைப்படுவதைப் பார்ப்பது மதிப்புடைய சடங்குமுறையாகும்.

 A treat for festival shoppers

• திருவிழா கடைக்காரர்களுக்காக ஒரு உபசரிப்பு
காரி பாவோலி ஆசியாவின் மிகப் பெரிய மசாலா சந்தையாக இருப்பதால் மட்டுமே தனித்துவமானதாக இல்லாமல் திருவிழா காலங்களில் பரிசளிப்பதற்காக தில்லியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் உலர்ந்த பழங்களை இந்த இடத்தில் தான் வாங்குகிறார்கள். எண்ணற்ற வடிவமைப்புகளில் உலர்ந்த பழ பெட்டிகளின் அடுக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, ரூபாய் 50 முதல் ரூபாய் 2,500 வரை விருப்பத்தேர்வுகள் உள்ளன. சந்தையில் ஒவ்வொரு சாத்தியமான உலர்ந்த பழங்களும் தட்டுக்களில் குவிக்கப்பட்டுள்ளன – கலிபோர்னியா மற்றும் காபூல் பாதாம் முதல் ராஜஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து உலர்ந்த திராட்சைகள் வரை. தீபாவளியின் போது சிறந்த இணக்கமுள்ள விலைகளில் அதனுடைய தரமான விருப்பத்தேர்வுகளால் காரி பாவோலியின் தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாகிறது.

Lanes inside lanes

• பாதைகளின் உள்ளே பாதைகள்
காரி பாவோலி தெருக்களில் சுற்றித்திரிதல் ஏடாகோடமான வழி சிக்கலில் வழியை கண்டுபிடிப்பது போன்று. எல்லையில்லாத பாதைகள் மற்றும் பாதைகளில், இந்த மில்லியன் மதிப்புள்ள மசாலா பஜாரின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் ஏதாவது தனிப்பட்ட ஒன்று சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.

உயர்வாக எழுப்பப்பட்ட ஷாப்பிங் மால்களின் காட்டில் பழைய உலகம் மறைந்து கொண்டிருக்கும் இந்த கால மாற்றத்தில், காரி பாவோலி நம்முடைய நிறைவான கடந்த காலத்தின் சின்னமாக உள்ளது. தனித்துவத்துடன் நிரப்பப்பட்ட, இந்த மாபெரும் பஜார் வலுவான நறுமணங்கள் மற்றும் பழையை தில்லியின் தெருக்களின் மூலம் நம்முடைய நிறைவான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here