சில அறியப்படாத RAC டிக்கெட் விதிகளைப் பார்க்கவும்

0
20577
RAC Tickets

பரபரப்பான சூழ்ச்சியுடன் துப்பறியும் நாவல்கள் படிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படி என்றால், சில இந்திய இரயில்வே விதிகள் மற்றும் விதிமுறைகளைப் படிக்கும் போது அதே உணர்வை நீங்கள் பெறலாம். ஆச்சரியப்பட வேண்டாம், சராசரி இரயில் பயணிகளுக்கு எப்போதுமே அவர்களின் மனதில் ஆயிரக்கணக்கான கேள்விகள் உள்ளன. RAC (இரத்துசெய்யப்படுவைகளுக்கு எதிரான முன்பதிவு) டிக்கெட் விதிகள். RAC-யின் பொதுவான விதிகள் குறித்து பேசும் நூற்றுக்கணக்கான தளங்கள் இருக்கும் போதிலும், பயணிகளுக்கு எந்த விதமான யோசனைகளும் இல்லாத தெளிவற்ற பகுதிகள் பல உள்ளன. இரயில் யாத்திரியில் இவற்றில் சிலவற்றிற்கு பதிலளிப்பன் மூலம் நாங்கள் இரயில் பயணிகளுக்கு உதவ விரும்புகிறோம். மேலும் நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் அதை உண்மையிலேயே எளிதாக வைக்க முயற்சிக்கிறோம்.

சாதாரண எக்ஸ்பிரஸ் இரயிலில் RAC ஒதுக்கீட்டின் கீழ் எத்தனை இடங்கள் வைக்கப்படுகின்றன?

RAC-Quota Details

சாதாரண எக்ஸ்பிரஸ் இரயிலில் RAC ஒதுக்கீட்டின் கீழ் 142 டிக்கெட்கள் இருக்கலாம். நாங்கள் விளக்குகிறோம் (நீங்கள் புரிந்துகொள்வதற்காக, நாம் நம்முடைய குறிப்பிற்காக ஸ்லீப்பர் கோச்களை எடுத்துக்கொள்ளலாம்): பொதுவான அளவில் எந்த எக்ஸ்பிரஸ் இரயிலிலும் 12 ஸ்லீப்பர் கோச்கள் உள்ளன. 12 ஸ்லீப்பர் கோச்கள் ஒவ்வொன்றிலும் 72 இருக்கைகள் உள்ளன, கிடைக்கின்ற இருக்கைகளின் மொத்த எண்ணிக்கை 864 (72X12). எக்ஸ்பிரஸ் இரயிலில், RAC ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்யப்படும் மொத்த பெர்த்கள் 71. இப்போது, இந்த 71 பெர்த்கள் ஒவ்வொன்றும் இரண்டு நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படும், எனவே மொத்த RAC எண்ணிக்கை வழக்கமாக 142 (71X2).

RAC டிக்கெட்டில் பயணிக்க உங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?

Journey on RAC Ticket

மற்றொரு நபருடன் நீங்கள் பெர்த்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாலும், 95%-க்கும் மேலான சூழ்நிலைகளில் நீங்கள் நிச்சயமாக பயணத்தை மேற்கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்தப்படி, RAC ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் உறுதிப்படுத்தப்படவில்லை அல்லது இரயிலில் காலியிடங்கள் எதுவும் இல்லை என்றால், சைடு லோயர் பெர்த் இருக்கைகள் பகிர்ந்து கொள்ள வேண்டிய இரண்டு நபர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஆனால் பயணத்தை நீங்கள் மேற்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது, அதை கண்டறிய கீழே படிக்கவும்.

RAC டிக்கெட்டை காத்திருக்கும் பட்டியலுக்கு நகர்த்த முடியுமா?

waiting list on RAC Ticket

ஆம், இது மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது என்றாலும், RAC டிக்கெட்டை காத்திருக்கும் பட்டியலுக்கு நகர்த்தலாம். இரயிலின் சில கோச்கள் இல்லை மற்றும் இருக்கைகளின் பற்றாக்குறை உள்ளது என்றால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படலாம். இரயிலில் 12 ஸ்லீப்பர் கோச்கள் உள்ளன அவைகளில் 1 கோச் தொழில்நுட்ப பிரச்சனையின் காரணத்தால் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. எனவே, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் பயணிகளுக்கு ஒரு கோச் குறைவாக இருப்பதுடன் இடமளிக்க வேண்டும். அத்தகைய அரிதான சூழ்நிலைகளில் RAC டிக்கெட் படியிறக்கப்படலாம்.

RAC டிக்கெட்களின் உறுதிப்படுத்துதல் எப்போதுமே வரிசையான எண்களைப் பின்பற்றுகிறதா?

Solo berth on RAC Quota

இல்லை, அனைத்து சூழ்நிலைகளிலும் இல்லை! RAC-ல் அவசரகால ஒதுக்கீடுகள் (எமர்ஜென்சி கோட்டா) இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே, RAC 1 முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற போது, அரிதான நேரங்களில் RAC-யின் குறைவான வரிசை முறையிலிருந்து டிக்கெட்களில் ஒன்று அவசரகால ஒதுக்கீட்டின் (EQ – எமர்ஜென்சி கோட்டா) காரணத்தால் உறுதிப்படுத்தபடலாம்.

உங்களிடம் RAC டிக்கெட் இருந்தால், உங்களுக்கு எப்போதுமே சைடு லோயர் பெர்த் இருக்கைகள் தான் ஒதுக்கப்படுமா ?

இது தான் பொதுவான விதி; எனினும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்களில் இரத்து செய்யப்படுபவைகளின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும் போது பயணிகளுக்கு மிடில் அல்லது அப்பர் பெர்த் ஒதுக்கப்படலாம். இது எப்போதாவது தான் நடைபெறுகிறது.

RAC டிக்கெட்களில் இருக்கும் சில பயணிகளுக்கு ஏன் தனிப்பட்ட பெர்த்கள் அனுமதிக்கப்படுகின்றன?

சில நேரங்களில் RAC டிக்கெட்களில் இருக்கும் நபருக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற பொதுவான வழக்கம் இல்லாமல் தனி பெர்த்கள் கிடைப்பதை நீங்கள் பார்க்கலாம். கடைசி நேரத்தில் அதே இருக்கை ஒதுக்கப்பட்ட நபருக்கு டிக்கெட் உறுதிப்படுத்தப்டும் போது மேலும் மறு-ஒதுக்கீடு செய்வதற்கு நேரமில்லாத போது அத்தகைய மகிழ்ச்சியான ஆச்சரியம் ஏற்படலாம்.

டிக்கெட்கள் ஏன் இரண்டு RAC எண்களைக் காட்டுகின்றன. எ.கா : RAC 15/RAC 9?

பலர் அத்தகைய சூழ்நிலையில் குழப்பமடைகிறார்கள். அதாவது நீங்கள் பதிவு செய்ய தொடங்கும் போது நீங்கள் RAC 15-ல் இருந்தீர்கள், ஆனால் நடைமுறையில் மேலும் 6 டிக்கெட்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன, எனவே நீங்கள் தற்போதைய நிலையில் RAC 9-க்கு நகர்த்தப்பட்டுள்ளீர்கள்.

RAC 3 & 4 இருக்கும் மற்றொரு நபருடன் (அதே PNR உடன்) பயணிக்கிறீர்கள் என்றால், இருக்கைகள் ஒன்றாக இருக்குமா? 

RAC டிக்கெட்கள் இரத்து செய்யப்படும் போது மட்டுமே உறுதிப்படுத்தப்படுகின்றன. எனவே உங்கள் டிக்கெட்களின் முன்னேற்றம் இரத்து செய்யப்படுபவைகளைச் சார்ந்து உள்ளது. எனினும், இந்திய இரயில்வே பொதுவாக ஒரு PNR-ல் இருக்கும் டிக்கெட்களுக்கு அதே இடத்தில் இடமளிக்க முயற்சிக்கிறது. எனவே, நீங்கள் அதே இருக்கைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

Family travel on RAC Quota

RAC டிக்கெட் உறுதிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளை கணிக்க முடியுமா?

ஆம், இதை நிச்சயமாக கணித்துவிடலாம் மேலும் அதை தான் நாங்கள் இரயில் யாத்திரியில் செய்கிறோம். ஆனால் அத்தகைய பகுப்பாய்விற்காக, அவசரமாக விரைந்து செல்கின்ற, இரத்து செய்யப்படுபவைகளின் வரலாறு மற்றும் இரயில்களின் உரிய நேரத்திலான செயல்திறனின் விரிவான பகுப்பாய்வு தேவைப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here