உங்கள் கோடைக்கால விடுமுறைக்காக திட்டமிடும் போது, உங்களுக்கான மிகப் பெரிய சவால் என்னவென்றால் உறுதிப்படுத்தப்பட்ட இரயில் பயணச்சீட்டு பெறுவது. 120 நாட்கள் முன்கூட்டிய பதிவு செய்யக்கூடிய அமைப்பு மற்றும் ஆன்லைனில் எளிதாக பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்வதுடன், எப்போதுமே ஆண்டு முழுவதும் பயணச்சீட்டு பற்றாக்குறை உள்ளது. குடும்பங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் மீண்டும் திட்டமிட வேண்டும் அல்லது அவர்களின் பயணத்திட்டங்களை கைவிட வேண்டும். எனினும், இரயில் யாத்திரியுடன், உங்கள் பயணத்திட்டங்களை கைவிடுவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. எங்களுடைய செயலி (அப்) மும்முரமான நேரங்களில் உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுப் பெறுவதற்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவும்.
உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுகள் பெறுவதற்கான 5 வழிமுறைகள்
1. இரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் இரயில்களைத் தெரிந்து கொள்ளுங்கள்:
ஒவ்வொரு குடும்பத்திலும் பயணிக்கக்கூடிய சாத்தியமான இரயில்களின் பட்டியல் குறித்து சக பணியாளர்கள் மற்றும் நண்பர்களுடன் விவாதித்து பயணத்தை திட்டமிடுபவராக ஒருவர் இருப்பார். இந்திய இரயில்வே கூட்டத்திற்கு இடமளிப்பதற்காக சிறப்பு இரயில்களை வழங்குகிறது. பாதையுடன் இரயில்களின் (சாதாரணமானது மற்றும் சிறப்பானது) முழுமையான பட்டியலை நீங்கள் பெறலாம். இதை தவிர, நீங்கள் குறிப்பிட்ட பயணத்தை சேமித்தால், இரயில் யாத்திரி செயலி (அப்) சிறப்பு இரயில் அறிவிப்புகள் பற்றி உங்களுக்கு தெரிவிக்கும்.
2. வாரத்தில் குறைவான கூட்டமிருக்கும் நாட்களை அடையாளம் காணவும்:
இரயில் யாத்திரியில் இருக்கும் தகவல் ஆய்வாளர்கள் குழு அனைத்து இரயில் பயணிகளுக்காகவும் சுவாரஸ்யமான நுண்ணறிவை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதிகப்படியான கூட்டத்துடன் வாரத்தில் மிகவும் நெரிசலான நாட்கள் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று தகவல் காட்டுகிறது எனவே, நீங்கள் பயணத்தை திட்டமிடும் போது, புறப்படுவதற்கும் திரும்புவதற்கும் இந்த இரண்டு நாட்கள் தவிர்க்கப்படுவதை உறுதிப்படுத்தவும். தேவை மிகவும் குறைவாக இருக்கும் போது, வார நாட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
3. மாற்று சிறிய இரயில் நிலையங்கள் பற்றி அறிவுத்திறம்:
பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு இரயில் நிலையத்திற்கான பயணிகளின் அளவு ஒரே மாதிரியானது என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் உங்கள் ஆரம்ப இரயில் நிலையத்திலிருந்து பயணிகளால் அதிக அளவில் பார்வையிடப்படும் சில இரயில் நிலையங்கள் உள்ளன. முக்கியமான இரயில் நிலையங்களுக்கான பயணச்சீட்டுக்களைப் பெறுவது கடினமாக இருக்கும் போது, சிறிய இரயில் நிலையங்களுக்கான பயணச்சீட்டுக்களைப் பெறுவது மிகவும் எளிதானது மேலும் நீங்கள் அங்கிருந்து சேருமிடத்தை எளிதாக அடையலாம்.
4. நிகழ்தகவுகளை ஆராயுங்கள்:
கடந்த காலத்தில் நீங்கள் பல முறை பயணித்திருந்தால், இரயில் நிலையங்களில் ஏறும் அல்லது இறங்கும் பயணிகளின் அளவு அனைத்து இரயில் நிலையங்களிலும் ஒரே மாதிரி இருக்காது என்று உங்களுக்கு தெரியும். உங்கள் பாதையில் குறிப்பிட்ட இரயில் நிலையங்களில் பயணிகள் அதிக அளவில் இறங்குவார்கள் மேலும் சில பயணிகள் தான் ஏறுவார்கள். இந்தப் போக்கு குறித்து நீங்கள் ஆய்வு செய்தால், உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுக்கள் பெறுவதற்கான நிகழ்தகவு அதிகம். இரயில் யாத்திரி மில்லியன் கணக்கான இரயில் பயணிகளான மக்கள் கூட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட விவரங்கள் மூலம் இந்த தகவல்களை வழங்குகிறது.
5. உறுதிப்படுத்தப்படும் நிகழ்தகவு உடன் உறுதியாக இருக்கவும்:
உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுக்களைக் கண்டுபிடிக்க முடியாத சந்தர்ப்பங்கள் உள்ளன. காத்திருக்கும் பட்டியலில் நீங்கள் பயணச்சீட்டுக்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் காத்திருக்கும் பட்டியலில் நீங்கள் பயணச்சீட்டுக்களைப் பதிவு செய்யும் போது, நீங்கள் அதனுடைய உறுதிப்படுத்தப்படும் நிகழ்தகவை இரயில் யாத்திரி செயலி (அப்) மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த நிகழ்தகவு பயணச்சீட்டுக்களுக்கான தேவை, இரத்து செய்யப்பட்டுள்ளவைகள் பற்றிய வரலாற்று தகவல்கள், ஏறுவது இறங்குவது பற்றிய புள்ளிவிவரங்கள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உங்கள் மொபைலில் இரயில் யாத்திரி செயலி (அப்) இருக்கும் போது, பல பயண சாத்தியக்கூறுகள் சாத்தியமாகின்றன. எங்களுடைய செயலியின் (அப்) பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்தி விருப்பமான இடத்திற்கு எந்த விதமான தொரந்தரவும் இல்லாமல் நீங்கள் பயணிக்கலாம்.