மிதக்கும் தீவுகளைக் கொண்ட மந்திர ஏரி

0
234

அற்புதமான பல்வேறு சேருமிடங்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. அது வட-கிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும். அற்புதமான சுற்றுலா அமைவிடங்கள், செழுமையான வனங்கள், தெளிவான ஏரிகள் மற்றும் அமைதியான மடாலயங்கள் வட-கிழக்கு மாநிலங்களில் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த அமைவிடங்களில் குறிப்பிடத்தக்கவை லோக்தாக் ஏரியாகும். மணிப்பூர் மாநில சுற்றுலாவின் போது இதை தவறவிடக்கூடாது.

மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள லோக்தாக் ஏரி வட-கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். உலகின் மிதக்கும் ஏரியாகவும் பமிட்கள் காரணமாக இவைகள் அடையாளம் காணப்படுகின்றன. இந்த பமிட்கள் பெரிய அளவிலான, மென்மையான, சாஸர்-வடிவிலான தண்ணீருக்கு கீழ் பகுதியிலிருந்து அமைந்துள்ள மண் மற்றும் தாவரங்கள் நிறைந்த இடமாகும். இந்த இயக்கையாக பமிட்கள், உண்மையிலேயே அளவு மற்றும் ஜனத்தொகையின் அடிப்படையில் அற்புதமானவையாதகும். அவற்றுள் பல ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் தன்மையைக் கொண்டுள்ளன. அவைகள் தொடர்ந்து தங்கள் அளவை மாற்றியும், ஆண்டின் பல்வேறு சீஸன்களில் ஏரியின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கும் தன்மையையும் கொண்டுள்ளன.

Keibul Lamjao

மணிப்பூர் மக்கள், சமூக ரீதியிலும் மற்றும் பொருளாதார ரீதியிலும் லோக்தாக் ஏரியை பெரிதும் சார்ந்துள்ளனர். நிஜத்தில், இந்த ஏரி, மணிப்பூர் மற்றும் அங்குவசிக்கும் 4000 – ற்கும் மேற்பட்ட மக்களின் உணவு, தொழில்களுக்கு ஆதாரமாகத் திகழ்கிறது. மேலும் உலகின் ஒரே தேசிய மிதக்கும் பூங்காவான கெய்புல் லம்ஜாவினையும் பம்டிகள் கொண்டுள்ளன. இவை, மணிப்பூர் டேன்ஸிங் டீர் என அழைக்கப்படும் இங்கு மட்டுமே காணப்படும் சங்கை வகையின மான்களை காக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

Loktak Lake: The Mystical Lake with Floating Islands

தாவர வகைகளில் 233 வகையினங்களைக் கொண்ட அபரிமிதமான உயிரியல் தன்மைகளை லோக்தாக் ஏரி கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான பறவை வகையினங்கள் இந்த ஏரியில் வசிக்கின்றன. இங்குள்ள 425 உயிரன வகைகளில் இந்திய மலைப்பாம்பு, குரைக்கும் மான் மற்றும் சாம்பார் ஆகிய அரிதான உயிரினங்களும் உட்படும்.

இயற்கையின் அழகை இரசிக்கும் வகையில், நம்பமுடியாத மிதக்கும் தீவுகளில் நேரம் செலவழிக்க இந்த ஏரி ஒரு அற்புதமான அமைவிடமாகும். காலை 06:00 மணி முதல் 10:00 மணி வரை சங்கை மான்கள் கூட்டம் உணவருந்த வெளியே வரும் நேரம் என்பதால், இது இப்பூங்காவைப் பார்வையிட சிறந்த நேரமாகத் திகழ்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here